சுண்டைக்காயை வைத்து இப்படி கூட பச்சடி சமைக்கலாம்! காலையில் இதை செய்து விட்டால் 3 வேலைக்கு குழம்பு பிரச்சனை இல்லை!

- Advertisement -

 பச்சடி என்று சொன்னாலே வெள்ளரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் போன்றவற்றை வைத்து செய்வதுதான் பெரும்பாலும் நம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் சுண்டைக்காய்  வைத்து ஒரு அருமையான பச்சடி ரெசிபியை செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

-விளம்பரம்-

காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த சுண்டைக்காய் பச்சடி செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான ஆரோக்கியம் தரக்கூடிய அசத்தலான டிஷ் இந்த சுண்டைக்காய் பச்சடி.

- Advertisement -

ளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும். சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது.சுவையான வெண்டைக்காய் பச்சடி எப்படி எளிதாக செய்வது? என்பது போன்ற குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Print
No ratings yet

சுண்டைக்காய் பச்சடி | Turkey Berry Pachadi Recipe In Tamil

காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த சுண்டைக்காய் பச்சடி செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான ஆரோக்கியம் தரக்கூடிய அசத்தலான டிஷ் இந்த சுண்டைக்காய் பச்சடி.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Turkey Berry Pachadi
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சுண்டைக்காய்
  • 1 தக்காளி
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 1 சுளை புளி
  • 3/4 டீஸ்பூன் சாம்பார் பொடி

தாளிக்க

  • கடுகு
  • பெருங்காயம்
  • உளுத்தம் பருப்பு
  • எண்ணெய்

செய்முறை

  • குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை அ‌வியலாக வேகவைத்துக் கொள்ளவும்.
  • சுண்டைக்காயை காம்பு நீக்கி, நான்காக நறுக்கவும்.  தண்ணீரில் சிறிது மோர் கலந்து, அதில் சுண்டைக்காயை நறுக்கிப் போட்டு, பிறகு பிழிந்துபோட்டு வதக்கலாம்.
  • சின்ன வெங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், த‌க்கா‌ளியை நற‌க்கவு‌ம்.  வாணலியில் சிறிது எண்ணென் விட்டு, சுண்டைக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கி யெடுக்கவும்.
  • பிறகு தக்காளியையும் சேர்த்து, அனைத்தையும் பருப்போடு போட்டு வேகவிடவும்.  சாம்பார்பொடியை சேர்த்து வேகவிடவும்.
  • காய் வெந்ததும், உப்பு, புளி கரைத்து ஊற்றவும்.  பச்சடி நன்கு கொதித்து, கெட்டியானதும் (கூட்டு பதத்தில்) கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

Nutrition

Serving: 430g | Calories: 110kcal | Carbohydrates: 9g | Protein: 13g | Cholesterol: 1mg | Potassium: 89mg | Vitamin A: 3IU