உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள உளுந்து புட்டு ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக
-விளம்பரம்-
இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?
இந்த சுவையான உளுந்தம் மாவு புட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த உளுந்தம் மாவு புட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
உளுந்தம் மாவு புட்டு | Uluntham Mavu Puttu Recipe in Tamil
உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள உளுந்து புட்டு ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 875kcal
Equipment
- 1 இட்லி பாத்திரம்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 3 cup அரிசி மாவு (வறுத்தது)
- 1 cup உளுந்தம் மாவு (வறுத்தது)
- 1½ cup துருவிய தேங்காய்
- 2 cup பொடித்த சர்க்கரை
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- உளுந்தம் மாவு புட்டு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த உளுந்தம் மாவு, வறுத்த அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).
- குழைத்த மாவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும். அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்)
- ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் குழைத்த மாவை போடவும்.
- அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு திரும்பவும் குழைத்த மாவை போடவும். பின்பு தேங்காய் பூவை போடவும்.
- இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை குழைத்த மாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும்.பிறகு குழைத்த மாவு நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் வேகவிடவும்.
- புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.உளுந்தம் மாவு புட்டு தயார்.
Nutrition
Serving: 500gm | Calories: 875kcal | Carbohydrates: 97g | Sodium: 346mg | Potassium: 546mg | Calcium: 64mg