- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Breakfast, dinner
சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என்றே பருப்பை ஊற வைத்து வடை செய்து இந்த வடகறி தயாரித்தனர். வடகறி உணவு என்பது தற்போது அனைத்து உணவகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது வடகறி இருந்தால்.
வடகறி உருவான கதை: மாரிமுத்து தேவர், 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்து சிறிய டீக்கடை ஒன்றை தொடங்கினார். பருப்பு வடை, மெது வடை, போண்டா போன்றவற்றையும் சுட்டு விற்றார். மீதம் இருந்த பருப்பு வடையை வடை கறியாக மாற்றி வீட்டில் சாப்பிட்டுள்ளார். அதுவே காலபோக்கில் பின்னாலில் அனைத்து ஹோட்டல்களிலும் பிரசித்தி பெற்றது. வாங்க இந்த அருமையான வடகறி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Ingredients
Method
முதலில் கடலைபருப்பை 30 நிமிடம் ஊற வைத்து சோம்பு, ஒரு பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துஎடுத்து வைக்கவும். அரைத்து எடுத்த கலவையை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் நன்றாகவேக வைத்து எடுக்கவும்
வெந்ததும் எடுத்து அதனை படத்தில் உள்ளது போல் நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு மற்றும் அனைத்து பொடிகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் கடலை பருப்பு கலவையும் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்பு சுண்டி வரும் வரை வைத்திருந்து இறக்கவும். பிறகுஅதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து சூடாக பரிமாறவும்.





