Home சைவம் வடகறியை இவ்வளவு ருசியா, சுலபமாக செய்ய முடியுமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த செய்முறை இருக்கும்...

வடகறியை இவ்வளவு ருசியா, சுலபமாக செய்ய முடியுமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த செய்முறை இருக்கும் செய்து பாருங்க!

இட்லி தோசை நாம் சட்னி சாம்பார் போன்றவைகளை தான் சைடு டிஷ் ஆக சாப்பிட்டு இருப்போம். சட்னிகளில் விதவிதமாக தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி சாப்பிட்டிருப்போம். சாம்பாரிலும் விதவிதமாக நாம் முயற்சி செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் வடகறி சட்னி சாம்பாரை மிஞ்சும் வகையில் சுவை அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

எப்பொழுதுமே இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் என்ன சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நாமும் சமையலில் விதவிதமாக ஏதாவது ஒன்று முயற்சி செய்தால் மட்டுமே நமக்கும் சமையல் மிகுந்த ஈடுபாடு இருக்கும். எனவே கொஞ்சம் வித்தியாசமாக இட்லி தோசை சப்பாத்திக்கு இந்த வடகறியை செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவையும் மணமும் அருமையாக இருக்கும். ஒரு சிலர் இந்த வடகறியை‌ ஏற்கனவே சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால் ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிட்டு இருப்பார்கள்.

ஹோட்டல்களில் மட்டுமே இதன் சுவை அருமையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு இருப்போம். சுவையாக எளிமையாக நம்மால் செய்ய முடியும். இந்த வடகறி அசைவ உணவு சமைத்தால் எவ்வளவு சுவை இருக்கும். மனமும் கூட அசைவ சமையலை போலவே தான் இருக்கும். இந்த சுவையான வடகறியை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
3.80 from 5 votes

வடகறி | VadaCurry Recipe In Tamil

இட்லிதோசை நாம் சட்னி சாம்பார் போன்றவைகளை தான் சைடு டிஷ் ஆக சாப்பிட்டு இருப்போம்.சட்னிகளில் விதவிதமாக தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி சாப்பிட்டிருப்போம். சாம்பாரிலும் விதவிதமாக நாம் முயற்சி செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் வடகறி சட்னி சாம்பாரை மிஞ்சும் வகையில் சுவை அருமையாக இருக்கும்.. இந்த வடகறி அசைவ உணவு சமைத்தால் எவ்வளவு சுவை இருக்கும். மனமும் கூட அசைவ சமையலை போலவே தான் இருக்கும். இந்த சுவையான வடகறியை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time4 hours 10 minutes
Active Time15 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Vadacurry
Yield: 4
Calories: 223.9kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலைப்பருப்பு
  • 3 மிளகாய்வற்றல்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லிதூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கடலை பருப்பை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.கடலை பருப்பு நன்றாக ஊழிய பிறகு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சோம்பும் மற்றும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள கடலை பருப்பு மாவை களாக தட்டி பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மறுபடியும் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை , பச்சை மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  • அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் எங்களது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • அதன் பின்பு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்னர் உன்னிடமாக வறுத்து வைத்துள்ள வடைகளை சிறிது சிறிதாக உதிர்த்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு ஐந்து நிமிடங்கள் மறுபடியும் நன்றாக வேக வைக்க வேண்டும் மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுப்பட்ட பதத்தில் இருக்க வேண்டும்.கடைசியாக மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுட சுட வடகறி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 223.9kcal | Carbohydrates: 12g | Protein: 6.2g | Fat: 16.4g | Sodium: 164.5mg

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு முருங்கைக்கீரை மசால் வடை இப்படி செஞ்சி பாருங்கள்! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!