வடகம் துவையல், இந்த துவையல் அனைத்து கலந்த சாதத்துடனும் சாப்பிட சுவையாக இருக்கும்!!!

- Advertisement -

துவையல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் அதுலையும் இந்த துவையல் அப்படிங்கிறது எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷலான துவையல் தான் இந்த துவையல் வடகம் துவையல். நிறைய பேருக்கு வடகம் அப்படின்னா என்னன்னு தெரியாம இருக்கும். வடகம் அப்படிங்கறது தாளிக்கிற பொருட்கள்  எல்லாத்தையும் சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து நல்லா காய வைத்து செய்றது.

-விளம்பரம்-

இந்த வடகத்துல கடுகு , சீரகம், வெந்தயம் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை அப்படின்னா எல்லா தாளிக்கிற பொருட்களையும் சேர்த்து நல்ல விளக்கெண்ணெயை ஊத்தி பிசைஞ்சு உருண்டையா பிடிச்சு வெயில்ல காய வைப்பாங்க. இந்த உருண்டைகள் வெயில்ல நல்லா காய்ந்து வரணும் நல்ல கருப்பு நிறத்தில் காய்ந்த பிறகு அந்த வடகத்தை எடுத்து குழம்பு தாளிக்க பயன்படுத்திக் கொள்வாங்க.

- Advertisement -

இதுல குழம்பு மட்டும் தாளிக்கிறதுக்கு இல்லை நல்லா இத வறுத்துட்டு துவையல் அரைச்சு சாப்பிட்டோம்னா அவ்ளோ சுவையாக இருக்கும். அதுவும் புளிசாதம், லெமன்சாதம், தயிர்சாதம், ரசசாதம் அப்படினு நீங்க இந்த வடகம் துவையல் வைத்து சாப்பிட்டீங்கன்னா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் சாப்பாடு அதிகமா சாப்பிட்டே இருப்பீங்க. சரி வாங்க இந்த சுவையான வடகம் துவையல் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.

Print
No ratings yet

வடகம் துவையல் | Vadaga Thuvayal Recipe In Tamil

வடகத்துல கடுகு , சீரகம், வெந்தயம் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை அப்படின்னா எல்லா தாளிக்கிறபொருட்களையும் சேர்த்து நல்ல விளக்கெண்ணெயை ஊத்தி பிசைஞ்சு உருண்டையா பிடிச்சு வெயில்லகாய வைப்பாங்க. இந்த உருண்டைகள் வெயில்ல நல்லா காய்ந்து வரணும் நல்ல கருப்பு நிறத்தில்காய்ந்த பிறகு அந்த வடகத்தை எடுத்து குழம்பு தாளிக்க பயன்படுத்திக் கொள்வாங்க. சரி வாங்க இந்த சுவையான வடகம் துவையல் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Vadaga thuvayal
Yield: 4
Calories: 193kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 ஸ்பூன் வடகம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1/2 கப் தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து வைத்து கொள்ளவேண்டும்.
  •  
    பிறகு அதில் வடகத்தை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும் வடகம் நன்றாக பொரிந்து  வறுபட்ட பிறகு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • இந்த வறுத்து வைத்துள்ள பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான வடகம் துவையல் தயார்.
  • இந்த துவையல் அனைத்து கலந்த சாதத்துடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 193kcal | Carbohydrates: 308g | Protein: 260g | Sodium: 217mg | Potassium: 29mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் பால் கூட்டு சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!