இந்த மழை இதமா சுட சுட வண்டிக்கடை சுண்டல் மசாலா வீட்டிலயே செஞ்சி கொடுத்து பாருங்க பிரமாதமான ஸ்நாக்ஸ்!

- Advertisement -

இந்த மழை டைம்ல சூடா வண்டி கடை சுண்டல் மசாலா சாப்பிட்டால் எப்படி சுவையா இருக்கும். அடிக்கிற மழையில யாரும் தள்ளுவண்டி கடை வச்சிருக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி தள்ளு வண்டி சுண்டல் மசாலா கிடைக்கும். அதுக்கு தான் நம்ம வீட்டிலேயே மசாலா சுண்டல் வண்டி கடை ஸ்டைலில் செய்து சாப்பிட்டோம்னா சும்மா மழைக்கு அதுவும் சுகமா இருக்கு சூடான தள்ளுவண்டி கடை சுண்டல் மசாலா.

-விளம்பரம்-

சுண்டல் செய்றதுக்கு நல்ல பச்சை பட்டாணி வாங்கி வேகவைத்து சில மசாலாக்களை அரைச்சு சேர்த்தோம்னா வண்டி கடையில எப்படி செய்வாங்களோ  அதே மாதிரி சுண்டல் மசாலா  ரொம்பவே சுவையா கிடைக்கும். இந்த சுவையான சுண்டல் மசாலா வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் சின்ன குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அது மேல சோள பொறி எல்லாம் போட்டு கொடுக்கும்போது சும்மா அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

இந்த சுவையான வண்டி கடை சுண்டல் மசாலா இந்த மழைக்கு சாப்பிடறதுக்கு இதமான ஒரு மாலை நேர சிற்றுண்டி இருக்கும். ஏன்னா மழை டைம்ல சில்லுனு சாப்பிட யாருக்குமே பிடிக்காது. சுட சுட ஏதாவது சாப்பிடணும் தோணும் அப்படி இருக்கிறப்போ இந்த மாதிரி வித்தியாசமாக கடைகளில் கிடைக்கிற மாதிரி  சுண்டல் மசாலா செய்து கொடுக்கும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க இந்த வண்டி கடை சுண்டல் மசாலா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

Print
5 from 1 vote

வண்டிக்கடை சுண்டல் மசாலா | Vandikadai Sundal Masala

சுண்டல் செய்றதுக்கு நல்ல பச்சை பட்டாணி வாங்கி வேகவைத்து சில மசாலாக்களை அரைச்சு சேர்த்தோம்னா வண்டி கடையில எப்படி செய்வாங்களோ  அதே மாதிரி சுண்டல் மசாலா  ரொம்பவே சுவையா கிடைக்கும். இந்த சுவையான சுண்டல்மசாலா வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் சின்ன குழந்தைகளுக்குரொம்ப ரொம்ப பிடிக்கும். அது மேல சோள பொறி எல்லாம் போட்டு கொடுக்கும்போது சும்மா அவ்வளவுடேஸ்டா இருக்கும்.
Prep Time6 hours
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Vandikadai Sundal Masala
Yield: 4
Calories: 59kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 12 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 12 ஸ்பூன் கரமசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

பரிமாறுவதற்கு

  • 1 வெங்காயம்
  • 1 கேரட்
  • 1 கப் சோள சிப்ஸ்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பட்டாணியை நன்றாக ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் பட்டாணியை கழுவி விட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். பட்டாணி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து விசில் போட்டு மூடி வைக்கவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விழுதாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலாக்கள் பச்சை வாசனை சென்று நன்றாக வதங்கிய பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,  கரம் மசாலா தூள் சேர்த்துநன்றாக கலந்து விடவும்.
  • பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது வேக வைத்துள்ளபட்டாணியிலிருந்து பட்டாணியும் தண்ணீரையும் தனியாக பிரித்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பட்டாணி வேகவைத்த தண்ணீரை இந்த மசாலாவில் கலந்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும். மசாலா நன்றாக கொதித்துவந்த பிறகு அதில் வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பட்டாணி சேர்த்து வேகவைக்கும் பொழுது மசாலா நன்றாக கட்டியாகி வரும் அப்பொழுது அடுப்பை நிறுத்தி விட வேண்டும் .சுண்டல் மசாலா தயார் ஆனபிறகு ஒரு பாத்திரத்தில் பட்டாணி மசாலாவை எடுத்து கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவியகேரட் மற்றும் சோள சிப்ஸ்  மேலாக தூவ வேண்டும்.பின்அதில்  கொத்தமல்லி தழை தூவி  பரிமாறினால் சுவையான சூடான வண்டி கடை சுண்டல் மசாலா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 59kcal | Carbohydrates: 30.3g | Protein: 9.8g | Fiber: 8.7g