உப்புமா பிடிக்காதவங்க கூட இந்த வரகரிசி உப்புமா செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க!

- Advertisement -

உப்புமா அப்படின்ற பெயரை கேட்டாலே நிறைய பேருக்கு அலர்ஜியா இருக்கும். ஆனா ஒரு சிலர் இந்த உப்புமாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்குற சமைக்கிறவங்களுக்கும் இந்த உப்புமா செய்வது ரொம்ப ஈஸியான ஒரு வேலையா இருக்கும் அதனால அவங்களும் அடிக்கடி உப்புமா செய்வாங்க ‌. சட்டுனு அவசரத்துக்கு ஏதாவது ஒரு டிபன் செய்யணும் அப்படின்னா இந்த உப்புமா தான் அவங்களுக்கு ஞாபகத்துக்கு வரும் உப்மா வச்சு கூடவே கொஞ்சம் சர்க்கரை வைத்து கொடுத்தால் வேலை முடிஞ்சிடுச்சு அப்படின்னு நினைச்சு உப்மா நெறைய பேரு செய்வாங்க.

-விளம்பரம்-

கோதுமை ரவை மைதா ரவை நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் சிறுதானியத்தில நம்ம உப்மா செஞ்சு சாப்பிட்டோம்னா அது உடம்புக்கு ரொம்பவே நல்லது. ரொம்பவே ஆரோக்கியமான சிறுதானிய வகையான வரகரிசில உப்மா செய்யப் போறோம். நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு ரொம்பவே ஆரோக்கியமா செய்யக்கூடிய இந்த வரகு அரிசி உப்புமா சாப்பிடுவதற்கும் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

காலை உணவாகவும் இரவு உணவாகவும் எப்ப வேணும்னாலும் இந்த வரகரிசி உப்புமாவை நம்ம சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் சின்ன வயசுல இருந்தே சிறுதானியங்கள் நம்ம கொடுத்து பழகணும் அந்த வகையில் அவங்களுக்கு இந்த உப்புமா கூட கொஞ்சம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான சைடிஷ் வச்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இல்லை நான் ரொம்ப சிம்பிளா வரகு அரிசி உப்புமா செஞ்சு கொஞ்சம் சக்கரவச்சு கொடுத்தாலே போதும் குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

குழந்தைங்க ஸ்கூல் விட்டு வரும்போது மாலை நேரத்தில் கூட நீங்க இந்த வரகரிசி உப்புமாவை செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளும் பசியோட வரும்போது நீங்க செஞ்சு கொடுக்குற இந்த வரகரிசி உப்புமாவை சாப்பிடுவாங்க. ரொம்ப வே சத்தான டேஸ்டான இந்த வரகரிசி உப்புமா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

வரகரிசி உப்புமா | Varagarisi Upma Recipe In Tamil

காலை உணவாகவும் இரவு உணவாகவும் எப்ப வேணும்னாலும் இந்த வரகரிசி உப்புமாவை நம்ம சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் சின்ன வயசுல இருந்தே சிறுதானியங்கள் நம்ம கொடுத்து பழகணும் அந்த வகையில் அவங்களுக்கு இந்த உப்புமா கூட கொஞ்சம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான சைடிஷ் வச்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இல்லை நான் ரொம்ப சிம்பிளா வரகு அரிசி உப்புமா செஞ்சு கொஞ்சம் சக்கரவச்சு கொடுத்தாலே போதும் குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளும் பசியோட வரும்போது நீங்க செஞ்சு கொடுக்குற இந்த வரகரிசி உப்புமாவை சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time7 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Vaaragarisi Upma
Yield: 4
Calories: 213kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • கேரட் சிறிதளவு
  • பீன்ஸ் சிறிதளவு
  • பச்சை பட்டாணி சிறிதளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  • கடலைபருப்பு பொன்னிறம் ஆன பிறகு வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
     
  • பிறகு கேரட் பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டு பச்சைப்பட்டாணியையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கி பிறகு மூன்று கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
  • தண்ணீர் நன்றாக கொதித்ததும் கழுவி சுத்தம் செய்த வரகரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
  • வரகரிசியை சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்து வந்தவுடன் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான வரகரிசி உப்புமா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 213kcal | Carbohydrates: 21g | Cholesterol: 1mg | Sodium: 121mg | Potassium: 218mg

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான பிரட் வெஜ் உப்புமா செய்வது எப்படி ?

-விளம்பரம்-