அரிசியை உணவோடு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள் இந்த வரகு அரிசி தோசை செய்து சாப்பிடலாம். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்து சூப்பரான ருசியான தோசை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அவியல், சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை பார்க்கலாம்.
அந்த காலங்களில் சிறுதானியத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். சிறுதானியம் இல்லாத வீடுகளே இருக்காது ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் சிறுதானியம் அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்த வரகு வெள்ளரி வைத்து சுவையான தோசை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க, வாங்க அதை எப்படி பண்ணலாம்? என்று பார்த்துருவோம்.
வரகு வெள்ளரி தோசை | Varagu arisi Cucumber Dosai Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் வரகு
- 100 கிராம் பிஞ்சு வெள்ளரிக்காய்
- 1 மிளகாய்
- தேங்காய் சிறிது
- 1 தேக்கரண்டி சீரகம்
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- வரகை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெள்ளரிக்காயைதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- மிக்ஸியில் ஊற வைத்த வரகு மற்றும் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து எடுக்கவும். அதேப் போல் மிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லியை அரைத்து எடுக்கவும்
- வரகுமாவுடன் அரைத்த மிளகாய் கொத்தமல்லி விழுதை சேர்த்து கலக்கவும். மாவு புளிக்கத் தேவையில்லை.
- உடனே தோசையாக வார்த்து எடுக்கலாம். சுவையான சத்தான தோசை ரெடி.