சைவ பிரியாணி சாப்பிடணும்னு முடிவு பண்ணா இந்த அட்டகாசமான கோலா உருண்டை பிரியாணியை செய்து அசத்துங்க!!!

- Advertisement -

கோலா உருண்டை பிரியாணி ,இதன் வாசமே பத்து தெருவுக்கு வீசும், அப்புறம் டேஸ்ட் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா இருக்கும். பிரியாணியில் பலவகை உண்டு. இதில் சைவம் அசைவம் என வகை வகையாக இருக்கிறது. ஆனால் சைவ கோலா உருண்டை  வைத்து பிரியாணி செய்யலாம் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா. இதன் சுவையும் அதே போல தான் வித்தியாசத்துடன் அட்டகாசமாக இருக்கும்.

-விளம்பரம்-

ஒரு காலத்தில் பிரியாணி என்பது எப்பொழுதாவது விஷேச நாட்களில் மட்டும் சாப்பிடும் உணவாக இருந்த காலம் போய், இன்று நினைத்த நேரமெல்லாம் சாப்பிடக் கூடிய உணவாக இந்த பிரியாணி மாறி விட்டது.. அந்த வகையில் இந்த கோலா உருண்டை  கொண்டு செய்யப்படும் பிரியாணி நல்ல வாசனை உடன் பிரியாணி தோற்றுப் போகும் வகையில் இதன் சுவை இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது சென்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
4 from 1 vote

கோலா உருண்டை பிரியாணி | Veg Kola Biryani In Tamil

கோலா உருண்டை பிரியாணி ,இதன்வாசமே பத்து தெருவுக்கு வீசும், அப்புறம் டேஸ்ட் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா இருக்கும்.பிரியாணியில் பலவகை உண்டு. ஒரு காலத்தில் பிரியாணி என்பது எப்பொழுதாவதுவிஷேச நாட்களில் மட்டும் சாப்பிடும் உணவாக இருந்த காலம் போய், இன்று நினைத்த நேரமெல்லாம் சாப்பிடக் கூடிய உணவாக இந்த பிரியாணி மாறி விட்டது.. அந்த வகையில் இந்த கோலா உருண்டை  கொண்டு செய்யப்படும் பிரியாணி நல்ல வாசனை உடன் பிரியாணிதோற்றுப் போகும் வகையில் இதன் சுவை இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்றுபார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது சென்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kola Urundai Biryani
Yield: 4
Calories: 649kcal

Equipment

 • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

 • 2 கப் பாசுமதி அரிசி
 • 1 பெரிய வெங்காயம்
 • 1 தக்காளி
 • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1 டீஸ்பூன் பட்டை, சோம்பு, லவங்கம், கசகசாவை வறுத்துப் பொடித்த பொடி
 • 2 பச்சை மிளகாய்
 • 3 டேபிள் ஸ்பூன் கஸூரி மேத்தி
 • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • உப்பு தேவைக்கேற்ப

கோலா உருண்டை செய்ய

 • 1 கப் கடலைப்பருப்பு
 • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • 3 காய்ந்த மிளகாய்
 • பெருங்காயத்தூள் சிட்டிகை
 • 1 டீஸ்பூன் சோம்பு
 • உப்பு தேவைக்கேற்ப
 • 1  பெரிய வெங்காயம் நறுக்கவும்
 • கொத்தமல்லித் தழை சிறிதளவு
 • எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

 • கோலா உருண்டை செய்யக் கொடுத்துள்ளவற்றை (வெங்கா யம், கொத்தமல்லி, உப்பு நீங்கலாக) அரை மணி நேரம் ஊறவைத்து, கொர கொரப்பாக அரைக்கவும்
 • இத்துடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டை களாக உருட்டவும்.
 • வாணலியில் எண் ணெயைக் காயவைத்து, உருண்டை களைப் பொரித்து எடுத்து வைக்கவும்.பாசுமதி அரிசியை 15நிமிடம் ஊறவைக்கவும்.
 • குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, நறுக்கிய தக்காளி,
 • அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கஸூரிமேத்தி, உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும், ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
 • ஆவி வெளியேறியதும் பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கலந்துவிடவும்,
 • சுவையான கோலா உருண்டை பிரியாணி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 649kcal | Carbohydrates: 26g | Sodium: 345mg | Potassium: 367mg | Calcium: 34mg

இதையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் மணக்க மணக்க தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!