பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் சுலையில் வெஜ் கோலா உருண்டை இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

மட்டன் அப்படின்னு சொல்லும் போது அதில் பலவிதமான உணவு வகைகள் செய்து சாப்பிடுவது ஆனால் எல்லாருக்கும் பிடிச்சமான ஒரு உணவு வகையில் வருது கோலா உருண்டை அதாவது மட்டன் கொத்துக்கறியில செய்ற கோலா உருண்டை. அதே மாதிரி சுவைல வெஜ் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்க போறோம். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நீங்கள் உபயோகப்படுத்திக்கலாம் . ஆனால் இப்போ பண்ண போற இந்த வெஜ் கோலா உருண்டை மீல்மேக்கரில் செய்ய போகிறோம்.

-விளம்பரம்-

புரட்டாசி மாதம் முடியப்போற இந்த டைம்ல வெஜ் கோலா உருண்டை செய்துசாப்டுட்டு அதுக்கப்புறம் நீங்க மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டீங்கனா உங்களுக்கு எந்த கோலா உருண்டை சூப்பரா இருந்தது என முடிவு பண்ண கூட முடியாத அளவுக்கு இருக்கும். இந்த வெஜ் கோலா உருண்டை ரெண்டும் ஒரே மாதிரியான சுவையில் இருக்கிறது தான் இதற்கு காரணம். கோலா உருண்டையை அப்படியே ஸ்னாக்ஸாவும் சாப்பிடலாம் இல்ல கோலா உருண்டை குழம்பு வச்சும் சாப்பிடலாம்.

- Advertisement -

அசைவ உணவு சுவையில் எப்படி சைவ உணவுகளை கொடுக்க முடியும்னு யோசிச்சு வித்தியாசமான உணவுகளை தயார் செய்திட்டு வந்துட்டு இருக்காங்க. அந்த மாதிரியான ஒரு உணவு தான் சைவ கோலா உருண்டை சோயா சங்ஸ் அதாவது மீல்மேக்கர் யூஸ் பண்ணி பண்ண போறோம். சைவ கோலா உருண்டை சுவையான சத்தாகவும் இருக்கும். சுவையான சத்தான மொறு மொறு சைவ கோலா உருண்டை எப்படி சமைச்சு சுவைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாருங்கள்.

Print
5 from 1 vote

வெஜ் கோலா உருண்டை | Veg Kola Urundai Recipe In Tamil

அசைவ உணவு சுவையில் எப்படி சைவ உணவுகளை கொடுக்க முடியும்னு யோசிச்சு வித்தியாசமான உணவுகளை தயார் செய்திட்டு வந்துட்டு இருக்காங்க. அந்த மாதிரியான ஒரு உணவு தான் சைவ கோலா உருண்டை சோயா சங்ஸ் அதாவது மீல்மேக்கர் யூஸ் பண்ணி பண்ண போறோம். சைவ கோலா உருண்டை சுவையான சத்தாகவும் இருக்கும். சுவையான சத்தான மொறு மொறு சைவ கோலா உருண்டை எப்படி சமைச்சு சுவைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Veg Kola Urundai
Yield: 4
Calories: 158kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் மீல்மேக்கர்
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 5 காய்ந்த மிளகாய்
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • புதினா தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

பொரிக்க

  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மீல்மேக்கரை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடான நீரை மீல்மேக்கர் மூழ்கும் அளவிற்கு ஊற்றி 5 நிமிடம் வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில்  பொட்டுக்கடலை,சோம்பு, கரமசாலா, காஷ்மீரி மிளகாய்தூள், காய்ந்தமிளகாய்,உப்பு சேர்த்து நல்ல பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த இந்த பொடியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.பின் ஊற வைத்த மீல்மேக்கரை இரண்டுமுறை வேறு தண்ணீர்விட்டு கழுவ வேண்டும்
  • கழுவிய  மீல் மேக்கர்களை பிழிந்து எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து கொள்ளவும்.
     
  • பேஸ்ட் போல் அரைக்க கூடாது.பிறகு பொடித்து வைத்துள்ள மாவில்  மீல்மேக்கரைசேர்த்து கொள்ளவேண்டும்.தேவையான அளவு  உப்பு,பொடியாக  நறுக்கியவெங்காயம், கொத்தமல்லி,புதினா , அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
  • அரிசி மாவை சேர்ப்பதால் கோலா உருண்டைமொறு மொறு என்று வரும். விருப்பம் என்றால் முட்டைகோஸ் , கேரட், குடைமிளகாய் வேற எந்த காய்கறியாக இருந்தாலும் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
  • கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்த கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் கோல் உருண்டைகளை போட்டு பொரித்து  எடுத்தால் சுவையான மொறு மொறு வெஜ் கோலா உருண்டை தயார்

Nutrition

Serving: 450g | Calories: 158kcal | Carbohydrates: 2g | Protein: 21g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 152mg | Fiber: 2g | Sugar: 0.5g