கல்யாண வீட்டு அவியல் கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அதன் ரகசியமே இது தான்!

- Advertisement -

தினமும் மதிய உணவாக சாதம் சாப்பிடுவது தான் அனைவரின் பழக்கமாக இருக்கிறது. இவ்வாறு வெள்ளை சாதத்துடன் சாம்பார், காரக்குழம்பு, கீரை குழம்பு, குருமா குழம்பு இதுபோன்ற குழம்புவகைகள் செய்யப்படுகிறது. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு காய்கறி பொரியலும் செய்யப் படுகிறது. ஆனால் காய்கறிகளை செய்து வைத்தால் வீட்டில் உள்ள அனைவரின் விருப்பமாக சாப்பிடுவதில்லை.

-விளம்பரம்-

காய்கறிகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே காய்கறிகளை எப்படியாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த காய்கறிகளையும் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிட அவற்றை இப்படி வித்தியாசமான சுவையில் அவியல் செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி வித்தியாசமான இந்த அவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சில வீட்டு கல்யாணங்களில் பந்தியில், அடை தோசைக்கு அவியல் வைக்கிறார்கள். சில கல்யாண பந்தியில், சாதத்திற்கும் அவியல் வைப்பார்கள். அவியலை, வெளியிடங்களில் சாப்பிடும் போது, அதை நம் வீட்டிலும் செய்ய வேண்டும் என்று சில பேருக்கு ஆசை இருக்கும். அவியலை சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படி செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு.

Print
3 from 1 vote

காய்கறி அவியல் | Vegetable Aviyal Recipe In Tamil

காய்கறிகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே காய்கறிகளை எப்படியாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த காய்கறிகளையும்வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிட அவற்றை இப்படி வித்தியாசமான சுவையில் அவியல்செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி வித்தியாசமான இந்தஅவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: Kerala
Keyword: Vegetable Aviyal
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 முருங்கைக்காய்
  • 1/4 துண்டு சேனை
  • 1 வாழைக்காய்
  • 1/4 துண்டு வெள்ளரிக்காய்
  • 1/4 துண்டு பூசணிக்காய்
  • 1 கேரட்
  • 8 பீன்ஸ்
  • 8 கொத்தவரங்காய்
  • 1/4 கப் தயிர்
  • உப்பு தேவைக்கேற்ப

அரைப்பதற்கு

  • 1/4 கப் தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்

செய்முறை

  • கேரட்,பீன்ஸ், உருளை, வாழை, பூசணி, சேனை, முருங்கை ஆகியவற்றை விரல் நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முதலில் நறுக்கின காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும் பின்னர் மற்ற காய்களையும் சேர்த்து உப்பு போட்டு வேக வைக்கவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களோடு தயிர் சேர்த்து அரைத்து எடுத்து வேக வைத்த காய்கறிகளுடன் சேர்க்கவும்.
  • தயிர் கலவையுடன் சேர்ந்து காய்கள் நன்கு வெந்து கெட்டியானவுடன் மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  • சுவையான அவியல் ரெடி. தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் ஊற்றாமலும் செய்யலாம். உருளைக்கிழங்கிற்கு பதில் சேப்பங்கிழங்கு சேர்க்கலாம். விரும்பினால் பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சாதத் ஏற்ற சைட் டிஷ்.

Nutrition

Serving: 450g | Calories: 110kcal | Protein: 10g | Cholesterol: 0.5mg | Calcium: 9mg