Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறு காய்கறி பக்கோடா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறு காய்கறி பக்கோடா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காய்கறிகள் பக்கோடா. தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது.

-விளம்பரம்-

மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. விருந்தினர்களின் வருகையின் போதும், குழந்தைகளின் சிணுங்கலின் போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம் பெறுவதும் பக்கோடா தான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்து விடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் காய்கறிகள் வைத்து பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

காய்கறி பக்கோடா | Vegetable Pakoda Recipe In Tamil

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காய்கறிகள் பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. விருந்தினர்களின் வருகையின் போதும், குழந்தைகளின் சிணுங்கலின் போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம் பெறுவதும் பக்கோடா தான்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Vegetable Pakoda
Yield: 4 People
Calories: 52kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் கேரட்
  • 1/4 முட்டைகோஸ்
  • 1/4 உருளைக்கிழங்கு
  • 1/4 காலிஃப்ளவர்
  • 1/4 கப் பீன்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/2 கப் சோள மாவு
  • 1 கப் மைதா மாவு
  • 2 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் காய்கறிகளை நன்கு கழுவி விட்டு பின் சற்று பெரிய துண்டுகளாக நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் மைதா மாவு, சோள மாவு, சில்லி ஃப்ளெக்ஸ், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து பிரட்டி பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் ஊற வைத்த காய்கறிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான காய்கறிகள் பக்கோடா தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்தும் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 52kcal | Carbohydrates: 6g | Protein: 5g | Fat: 2g | Sodium: 8mg | Potassium: 195mg | Fiber: 5.1g | Vitamin A: 98IU | Vitamin C: 8.4mg | Calcium: 11mg | Iron: 4.22mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் பால் கூட்டு சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!