பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான் இந்த வெள்ளரிக்காய். சில நேரங்களில் கண்ணு ரொம்ப சூடாகிட்டா கண்ண குளிர்ச்சி ஆக்குவதற்கு வெள்ளரிக்காய கண்களில் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே ரிலாக்ஸ் ஆக படுத்திருப்போம். அப்படி வெள்ளரிக்காய் கண்களில் வைக்கும் போது கண்களுக்கு ரொம்ப குளிர்ச்சியா இருக்கும்.
அது மட்டுமில்லாம இந்த வெள்ளரிக்காய் வச்சு வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செஞ்சா பிரியாணிக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இந்த வெள்ளரிக்காய் மட்டுமில்லாமல் இந்த வெயில் காலத்துல வெள்ளரிப்பழம் ரொம்பவே ஃபேமஸ் அப்படின்னு சொல்லலாம். வெள்ளரி காயை விட வெள்ளரிப்பழம் இன்னும் உடம்பில் இருக்க சூட்டை தணிக்கும். அந்த வகையில வெள்ளரிப்பழம் உங்களுக்கு கிடைத்தது என்றால் அதை வைத்து ஒரு சூப்பரான ஜூஸ் போட்டு குடிங்க.
இந்த வெள்ளரிப்பழத்தில் அப்படியே சீனி போட்டு சாப்பிடுவாங்க அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இதை ஜூஸ் மாதிரி அடிச்சு குடிச்சீங்கன்னா ரொம்ப சத்தானது. இந்த வெள்ளரிப்பழம் ஜூஸ் செய்வதற்கு நமக்கு வெறும் மூன்று பொருட்கள் மட்டுமே போதும் சூப்பரான ஜூஸ் போட்டு கொடுத்து நம்ம உடல் சூட்ட தனிச்சுக்கலாம். ரொம்பவே இயற்கையான ஆரோக்கியமான முறையில் நம்ம உடல் சூட்டை தணிக்கிறதுக்கு வெள்ளரி பழம் ஒரு மிகச் சிறந்த பொருள் அப்படின்னு சொல்லலாம். இப்ப வாங்க இந்த ஈஸியான சத்தான ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிக்கிறது என்று பார்க்கலாம்.
வெள்ளரிப்பழ ஜூஸ் | Vellari pazha juice recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 பெரிய வெள்ளரி பழம்
- 1 டீஸ்பூன் சியா விதைகள்
- 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
செய்முறை
- முதலில் வெள்ளரி பழத்தின் தோல் நீக்கி அதன் உள்ளே இருக்கும் விதைகளையும் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- சியா விதைகளை சிறிதளவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
- ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெள்ளரி பழம் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- ஒரு டம்ளரில் ஊற வைத்த சியாவிதைகளை சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை கலந்து குடித்தால் சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு குளு குளுன்னு மின்ட் லஸி செஞ்சு குடிச்ச பாருங்க!