- Advertisement -
எப்பொழுதும் நம் வீட்டில் ஒரே சாம்பார், ரசம், என வைத்து அதற்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த புளிக்கூட்டு ஏற்றதாக இருக்கும். அதிலும் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் போது அதன் சுவையே தனி தான் இதனுடன் புளிப்பு, இனிப்பு, காரம், அனைத்தையும் சேர்த்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபி. உங்கள் வீட்டில் உள்ளவர்களும்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டை விரும்பி சாம்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
வெண்டைக்காய் புளிக்கூட்டு | Vendakkai Puli Koottu Recipe In Tamil
சாம்பார், ரசம், என வைத்து அதற்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த புளிக்கூட்டு ஏற்றதாக இருக்கும். அதிலும் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் போது அதன் சுவையே தனி தான் இதனுடன் புளிப்பு, இனிப்பு, காரம், அனைத்தையும் சேர்த்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபி. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டை விரும்பி சாம்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Yield: 4 people
Calories: 180kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 10 வெண்டைக்காய்
- தோலுரித்த சின்ன வெங்காயம்
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி பொடியாக நறுக்கியது
- 1 பல் பூண்டு சிறியது
- ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை சிறிதளவு
- புளி சிறிய நெல்லிக்காய் அளவு
- ¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
- ¼ டீஸ்பூன் சீரகம்
- ¼ டீஸ்பூன் கடுகு
- 4 டீஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெண்டைக்காயை சுத்தம் செய்து ஒரு இன்ச் துண்டுகளாக்கவும், புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.
- அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு அதனுடன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து, வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- பிறகு, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்து, நீர் ஓரளவு வற்றியதும், இறக்கவும்.
- இப்பொழுது அருமையான மற்றும் சுவையான வெண்டைக்காய் புளிக் குழம்பு தயார்.
Nutrition
Calories: 180kcal | Carbohydrates: 26.73g | Protein: 4.91g | Fat: 15.15g | Potassium: 0.33mg | Fiber: 7.31g | Vitamin A: 73.47IU | Vitamin C: 14.3mg | Calcium: 108.32mg | Iron: 2.71mg