விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கித் தருவதைவிட, வீட்டிலேயே குழந்தைகள் விரும்பும் வண்ணம் விதவிதமான திண்பண்டங்கள் செய்து கொடுக்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல.
-விளம்பரம்-
இதனையும் படியுங்கள் :ருசியான கேரளா பனங்கிழங்கு கார புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
வீட்டிலேயே தின்பண்டங்களைச் செய்வதால் செலவும் மிக குறைவு தான் அத்துடன் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த உணவாக இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிட உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவான வெண்ணெய் புட்டு செய்து கொடுக்கலாம்.இதை குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவரும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஏதாவது செய்து சாப்பிடலாமே என தோன்றினால் சூடாக வெண்ணெய் புட்டு செய்து கொடுங்கள்.
வெண்ணெய் புட்டு | Vennai Puttu Recipe in Tamil
விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கித் தருவதை விட, வீட்டிலேயே குழந்தைகள் விரும்பும் வண்ணம் விதவிதமான திண்பண்டங்கள் செய்து கொடுக்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. வீட்டிலேயே தின்பண்டங்களைச் செய்வதால் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த உணவாக இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிட உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவான வெண்ணெய் புட்டு செய்து கொடுக்கலாம்.
Yield: 4 People
Calories: 301kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1/4 கப் கடலை
- 1 1/4 கப் வெல்லம்
- 1/2 கப் தேங்காய்
- 1 டீஸ்பூன் ஏலக்காய்
- 1 டீஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியில் சேர்த்து நன்கு மிருதுவாக அரைக்கவும்.
- பின் கடலை பருப்பை 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைத்து அரைத்த அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி மாவு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- அரிசி மாவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது பருப்பை சேர்த்து கிளறவும்.
- பின் மற்றோரு கடாயில் வெல்லத்தை 1 கப் தண்ணீர் சேர்த்து அரை கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- பாகு தயாரானதும் அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- மாவு கெட்டியாகத் தொடங்கும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு கிண்ணத்தில் நெய் தடவி நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெண்ணெய் புட்டை மாற்றவும்.
- விரும்பினால் முந்திரி பருப்பு மேலே சேர்த்து பரிமாறலாம்.
Nutrition
Serving: 500g | Calories: 301kcal | Carbohydrates: 53g | Protein: 50g | Fat: 4g | Saturated Fat: 1g | Sodium: 575mg | Fiber: 8g | Sugar: 2g | Calcium: 9.26mg | Iron: 0.32mg