நாம் வீட்டில் ஏற்றிய விளக்கை எப்படி முறையாக குளிர வைக்க வேண்டும் தெரியுமா ?

- Advertisement -

நாம் பூஜை செய்யும் போது எதற்காக விளக்கு ஏற்றி பூஜை செய்கிறோம் என்று தெரியுமா ஏனென்றால் விளக்கில் நம் நேற்றும் ஜோதி வடிவ நெருப்பில் நாம் இறைவனை காண்போம் அதனால்தான் நாம் விளக்கு ஏற்றும்போது பயபக்தியோடு மந்திரங்கள் சொல்லி விளக்கு ஏற்றுவோம். ஆனால் விளக்கை குளிர வைக்கும் போதும் அதை பயபக்தியோடு சில வழிமுறைகளை பின் பற்றி குளிர வைக்க வேண்டும். ஆனால் அதை நாம் செய்ய தவற விடுகிறோம். நம்மில் பலரும் விளக்கை குளிர வைக்கும் போது சாதாரணமாக ஒரு பூவை எடுத்து விளக்கை குளிர வைத்துவிட்டு சென்று விடுகிறோம். ஆனால் இனி இதை செய்யாதீர்கள் இன்று நாம் விளக்கை எப்படி முறையாக குளிர வைப்பது என்பதை பற்றி தான் இந்த ஆன்மிக குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணப் போகிறோம்.

-விளம்பரம்-

சரி இனி நாம் விளக்கை எப்படி குளிர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம். முதலில் நாம் விளக்கை குளிர வைப்பதற்கு முன்பாக மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டு. எப்படி இந்த ஜோதி இருளை போக்கி ஒளி தருகிறோதோ அது போல எங்கள் வீட்டிலும் நாங்கள் வாழ்கின்ற வாழ்விலும் சரி இருளை நீக்கி ஒளியை தர வேண்டும் என வேண்டிக் கொண்டு வெள்ளியினால் செய்யப்பட்ட ஒரு குச்சியை வைத்து விளக்கின் திரியை உள் இழுத்து அதை இப்படி முறையாக குளிர வைக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் எல்லோருடைய வீட்டிலும் வெள்ளியால் செய்யப்பட்ட குச்சி இருக்காதல்லவா அப்படிப்பட்டவர்கள் மாதுளை மரத்தின் குச்சி, மருதாணி மரத்தின், குச்சி நெல்லிக்காய், மரத்தின் குச்சி, கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்தி விளக்கை குளிர வைக்க வேண்டும் இப்படி முறையாக நாம் விளக்கை குளிர வைக்கும் பொழுது நம் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இதனுடன் நாம் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது தொடர்பான இன்னும் சில விஷயங்களை பற்றி நாம் பார்க்கலாம் வாருங்கள். நாம் வீட்டில் காலை மாலை என இரு வேளையும் மகாலட்சுமியை மணதார வேண்டி விளக்கு ஏற்றினால் வீடு எப்போதும் லட்சுமி கடாட்சமாக தெரியும். மேலும் காலையில் நீங்கள் தினசரி எப்பொழுது விளக்கு ஏற்றுவீர்களோ தினசரி அதே நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் இன்று காலை எந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவீர்களோ அதே நேரத்தில் தான் நாளையும் மகாலட்சுமி உங்கள் வீட்டு வாசலில் நிற்பாள். அப்போது நீங்கள் விளக்கேற்றினால் உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி தானாக குடியேறி விடுவாள். அத நாள் தினசரி விளக்கு ஏற்றுவதில் ஒரே மாதிரியான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பின்பு விளக்கில் பழைய எண்ணெய் இருக்கும் பொழுது அந்த பழைய எண்ணெயை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு விளக்கை தேய்த்துக் கழுவி கொள்ளுங்கள். அதன்பின்பு விளக்கில் புதியதாக எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிலிருந்து எடுத்த பழைய எண்ணெயை

உங்களது வீட்டு நிலை வாசலில் அருகே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து அதில் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் வீட்டில் விளக்கு ஏற்றும் ஆண்களோ பெண்களோ குளிர வைக்கும் போதும் விளக்கு ஏற்றும் போதும் இந்த வழிமுறைகளை கடைபிடித்து வாருங்கள் உங்களது வீட்டில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here