Home ஆன்மிகம் விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்

விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்

பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றுவது அந்த வீட்டிற்கு தெய்வ கடாட்சத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கும். தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் வீட்டில் விளக்கு ஏற்றி வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வீட்டில் மன அமைதியும் நேர்மறை ஆற்றலும் மனதிற்கு நிம்மதியும் கிடைக்கும். ஆனால் விளக்கு ஏற்றும் போது நாம் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும் ஒரு சிலர் தெரியாமல் விளக்கு ஏற்றும் போது பல தவறுகளை செய்வது உண்டு. அப்படி நாம் விளக்கு ஏற்றும் போது சில தவறுகள் செய்தால் அது நமக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும் எனவே விளக்கு ஏற்றும் போதும் எப்பொழுதும் சரியான முறையில் ஏற்ற வேண்டும். வீட்டில் நாம் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கு கஜலட்சுமி விளக்கு அகல் விளக்கு குத்துவிளக்கு என எதுவாக இருந்தாலும் அனைத்தையும் முறைப்படி செய்ய வேண்டும். தீப ஒளியில் தெய்வம் குடியிருக்கும் என்று சொல்வார்கள் அதனால் நாம் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மிகவும் கவனமாக ஏற்ற வேண்டும். வீட்டில் மட்டுமில்லாமல் கோவிலுக்கு சென்றாலும் முறைப்படி விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றும் போது நாம் கவனித்தல் செய்ய வேண்டியவைகளும் செய்ய வேண்டாதவைகளையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவைகள்

நாம் விளக்கு ஏற்றக்கூடிய பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை பூஜை அறையை சுத்தம் செய்து புதிதாக விளக்குகளுக்கும் தெய்வ படங்களுக்கும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

விளக்கு ஏற்றும் போது சுத்தமான நல்லெண்ணெயில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் போது வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

வடக்கு திசையில் விளக்கு ஏற்றும் போது அது மன நிம்மதியையும் வீட்டிற்கு பணவரவையும் தரும். கிழக்கு திசையில் விளக்கு ஏற்றும் போது அது செல்வ வளத்தையும் மன அமைதியையும் தரும்.

-விளம்பரம்-

விளக்கு ஏற்றும் போது செய்யக்கூடாதவைகள்

சில சமயங்களில் விளக்கின் ஒளிக்கு பூச்சிகள் விளக்கில் உள்ள எண்ணெயில் விழுந்து விடும். அப்படி பூச்சி விழுந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற கூடாது. அந்த எண்ணிக்கை அகற்றிவிட்டு புது எண்ணெயில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்

உடைந்த விலையில் எப்பொழுதும் விளக்கு ஏற்றவே கூடாது.

பூஜை அறையை சுத்தம் செய்யாமலும் விளக்கு ஒருபோதும் ஏற்றக்கூடாது.

-விளம்பரம்-

மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் வீண் செலவுகள் வரக்கூடும் எனவே மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது என்பது ஐதீகம். அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து மட்டுமே தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும் சில நேரங்களில் தெற்கு திசையில் ஏற்றக்கூடாது.

கோவிலுக்கு சென்றாள் அடுத்தவர் ஏற்றிய விளக்கிலிருந்து நாம் விளக்கு ஏற்றுக் கூடாது. நம்முடைய தீப்பெட்டியில் இருந்து தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் வற்றாத செல்வ வளம் பல மடங்காக பெருக, விளக்கு ஏற்றும் போது இந்த 1 வார்த்தையை சொல்லுங்கள் போதும்!