வீட்டில் வற்றாத செல்வ வளம் பல மடங்காக பெருக, விளக்கு ஏற்றும் போது இந்த 1 வார்த்தையை சொல்லுங்கள் போதும்!

- Advertisement -

பொதுவாக பெண்கள் அதிகாலை எழுதினவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று இருக்கிறது. அதனது பின் பற்றுவதன் மூலம் அந்த வீடு செழித்து விளங்கும். பொதுவாக பெண்கள் என்று சொன்னால் ஒவ்வொரு குடுமப்த்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கருதப்படும் பெண்கள் காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள அனைத்து பணிகளை செய்து குடிப்பதன் காரணமாக தான். அந்த குடும்பம் நல்ல ஒரு முன்னேற்றத்தின் பாதையில் செல்வதை காணமுடியும். அப்படி இருக்கும் போது வீட்டில் உள்ள பெரியவர்களான நம் அம்மாக்களும் பாட்டிமார்கள் இதை தான் கடைப்பிடித்து வந்தார்கள் என்றே சொல்லலாம். அனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் இதையெல்லாம் கடைபிடிப்பது என்பது ஒரு கேள்விக்குறி என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பெண்கள் தினசரி வீடுகளில் சில முக்கியமான விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே வீட்டில் தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து, தெய்வீக தன்மை பெருக துவங்கும். இதனால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள், கஷ்டங்கள் நீங்கு, நன்மைகள் மட்டுமே நடக்கும். மங்களத்தின் அடையாளமாக பெண்கள் கருதப்படுவதால் அவர்கள் விளக்கேற்றி, பூஜை செய்யும் போது வீட்டில் தெய்வ கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும்.

- Advertisement -

வீட்டில் ஒரு நல்ல நாளில் அனைவரும் கடைப்பிடிக்கும் பழக்கத்தில் ஒன்று விளக்கேற்றுவது. விளக்கு ஏற்றும் போது பெண்கள் கடவுளை மனதில் முழுமையாக நினைத்து கொண்டு ஏற்ற வேண்டும். பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று கடமைக்கு சாமி கும்பிடக்கூடாது. விளக்கு ஏற்றும் போது சில சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

விளக்கு ஏற்றும் போது பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டில் விளக்கு ஏற்றும் போது பெண்கள் ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை சொல்லிவிட்டு அதன் பிறகு விளக்கு ஏற்ற வேண்டும். இது மகாலட்சுமியின் பீஜ மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பீஜ மந்திரம் செல்வ வளத்தை ஈர்க்கக் கூடியது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய குடும்பத்திற்கு பெயர் புகழ் அந்தஸ்து இவைகளை தேடி தரக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு.

வறுமையை விரட்டும் விளக்கு

சிலருக்கு கையில் சுத்தமாக பணம் இருக்காது. வறுமை தாண்டவமாடும். கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்கள். பண பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றினால் மூன்றே வாரங்களில் நல்ல பலனை பெற முடியும். நம்முடைய வீட்டில் இருக்கும் வறட்சியை நீக்கி, வீட்டை வளமாக்கக் கூடிய தன்மை தீபத்திற்கு உள்ளது.

-விளம்பரம்-

வீட்டில் இருக்கும் வறுமையை விரைவாக விரட்டி அடிக்க, உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் ஒரு சின்ன பலகையின் மேல் மண் அகல் விளக்கு வைத்து விடுங்கள். அதில் நல்லெண்ணெயோ அல்லது பசு நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு விளக்கு ஏற்றி வையுங்கள். அந்த விளக்கத்திற்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற இந்த ஒரு மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இந்த விளக்கு உங்களுடைய வீட்டில் தொண்ணூறு நாட்கள் ஏற்றப்பட வேண்டும்.

காலை அல்லது மாலை எந்த நேரத்தில் முடியுமோ அந்த நேரத்தில் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். வீட்டுப் பெண்களால் மாதவிடாய் நாட்களில் இறை வழிபாடு செய்ய முடியாது. விளக்கு ஏற்ற முடியாது. உங்களுடைய வீட்டில் வேறு ஏதாவது பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை விட்டு இந்த விளக்கை ஏற்ற சொல்லலாம்.

-விளம்பரம்-

இப்படி செய்யும்பட்சத்தில் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடித்த பின்பு நீங்கள் செய்யக்கூடிய இந்த தீப பரிகாரம் வீட்டில் வறுமை நீக்குவதற்கு மிக மிக சுலபமாக அமையும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.