விநாயகர் சதுர்த்தி எப்படி வழிபடும் முறை!

Vinayagar chathurthi
Vinayagar chathurthi
- Advertisement -

நாம் இந்து மதம் முறைப்படி பல ஆண்டுகளாக எந்தவித சுப நிகழ்ச்சிகளை மேற்கொண்டாலும் முதலில் விநாயகரை வழிபட்டு பூஜை செய்து விட்டு தான் அந்த காரியத்தை நாம் தொடங்குவோம். விநாயகர் சதுர்த்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மூலக்கடவுள் விநாயகருக்கு சதுர்த்தி கொண்டாட வேண்டும் அந்த வகையில் இன்றைய நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

விநாயகர் சதுர்த்தி

விநாயகருக்கு சதுர்த்தி அன்று புதிய களிமணலால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து பூஜித்து வழிபடுவோம். அதன் பிறகு ஐந்து நாட்கள் தினசரி விநாயகருக்கு சம்பந்தப்பட்ட பூஜைகள், புனஸ்காரங்கள் எல்லாம் செய்து வருவோம். அதன் பிறகு நம் பூஜித்து வந்த களிமணலால் செய்யப்பட்ட விநாயகரை நீர் நிலைகளில் அந்த சிலைகளை கொண்டு போய் கரைத்து விடுவோம். இப்படியாக பல வருடங்களாக நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகிறோம். விநாயகருக்கு பூஜை, வழிபாடு செய்யும் முறைகள், பூஜை பொருட்கள், பூஜை செய்யும் முறை போன்ற அனைத்து விஷயங்களையும் இந்ந தொகுப்பில் பார்க்கலாம்.

- Advertisement -

பூஜை பொருட்கள்

விநாயகருக்கு வழிபட தேவையான பூஜை பொருட்கள் அரிசி, பிள்ளையார், மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், அருகம்புல், விநாயகருக்கு உடுத்துவதற்கு பட்டு துணி அல்லது காவி துணி, அருகம்புல் அல்லது எருக்கம் பூவில் மாலை, தேங்காய் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, போன்ற பொருட்கள் பூஜைக்காக தேவைப்படும்.

-விளம்பரம்-

விநாயகர் அலங்காரம்

பூஜைக்கு முன் செய்ய வேண்டியதில் முதலில் ஒரு பலவகை எடுத்தது நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு அதன் மீது பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும் அதற்கு விநாயகரின் சிலைக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தை பயன்படுத்தி பொட்டு வைத்து பிறகு அதன் மீது குங்குமத்தால் திலகம் இட வேண்டும்.

பின்பு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புது துணியை சுற்றி அலங்கரித்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகருக்கு பிடித்த மாலையிட்டு கொள்ளவும் அதன் பின் விநாயகரை சுற்றி அருகம்புல் பரப்பி வைத்து விடுங்கள்.

பூஜைக்கு முன் செய்யவேண்டிய

அதன் பிறகு பிள்ளையார் சிலைக்கு முன்பாக ஒரு வெண்கல தட்டை வைக்க வேண்டும் அந்த தட்டில் அரிசியை வைத்து அதன் மீது வெற்றிலையை வைக்க வேண்டும் வெற்றிலையின் மேல் வழக்கம் போல் தண்ணீரில் சந்தனம் குழைத்து எப்பொழுதும்போல் பிள்ளையார் பிடித்துக் கொள்ளுங்கள்.

பிள்ளையார் பிடித்துக் கொண்டிருக்கும் போதிலிருந்து
“ஓம் கணபதியே நமஹ”
“ஒம் விநாயகனே நமஹ”
“ஓம் கணபதியே நமஹ”

என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பூஜை வேலைகளை பாருங்கள்.

நைவேத்திய பொருட்கள்

நாம் வைத்திருக்கும் பிள்ளையார் முன்பு இலையில் விநாயகருக்கு பிடித்த பிரசித்தி உணவுகளான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற இனிப்பு பலகாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், விளாம்பழம் போன்ற பழ வகைகளையும் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் விநாயகருக்கு வைத்திருக்கும் நைவேத்திய படையல் ஒற்றைப்படையில் வைக்க வேண்டும். வைத்திருக்கும் படையல் எண்ணிக்கை 5, 7, 9, 11 என்று ஒற்றைப்படையில் வருவது போல் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் விநாயகரை வழிபடவேண்டும்

அனைத்தையும் வைத்துக்கொண்டு வேலைகள் முடிந்த பின்பு நாம் விநாயகரை வழிபட ஆரம்பிக்கலாம் எந்த ஒரு பூஜை நாம் தொடங்கினாலும் விநாயகரை தொடங்கி தான் ஆரம்பிப்போம் அதன்பின் நமது குலதெய்வம் இஷ்ட தெய்வம் என ஒவ்வொருத்தரையாக கும்பிடுவோம். அதுபோல விநாயகர் சதுர்த்தியான இன்று விநாயகரை முதலில் கும்பிட்டு அடுத்து உங்கள் குல தெய்வங்களை வழிபட வேண்டும் பின்பு உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டு பூஜை செய்து கொள்ளலாம்.

குலதெய்வ வழிபாடு

விநாயகரே பூஜித்து விட்டு விளக்கு ஏற்றி அடுத்ததாக குலதெய்வத்தை வழி விட ஆரம்பிக்கலாம் உங்களுக்கு குலதெய்வத்தின் புகைப்படம் உங்கள் வீட்டில் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் புகைப்படம் இல்லாதவர்கள் பூஜை செய்ய வைத்திருக்கும் கலசத்தில் தண்ணீர் எடுத்து அதை குலதெய்வமாக மனதில் நினைத்து வழிபடலாம். அதன்பிறகு தீபம் ஏற்றி விநாயகருக்கு காட்டி விட்டு மற்ற தெய்வங்களுக்கும் பேட்டி விட்டு தீபாரதனையை செய்ய வேண்டும்.

“ஓம் கணபதியே நமஹ”
“ஓம் விநாயகனே நமஹ”

விநாயகர்க்கு பாடல்

நாம் மேற்கண்ட முறைகளின் படி விநாயகரை வழிபட்டு குலதெய்வத்தை வழிபட்டு பூஜை செய்த பிறகு சிறிது நேரம் விநாயகரின் அருகில்லே அமர்ந்து விநாயகரை போற்றி பாடப்படும் பாடல்கள், விநாயகருக்கு உகந்த மந்திரங்கள் சொல்லிக்கொண்டு உங்கள் வேண்டுதல் மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் அவரிடம் சொல்லி வேண்டி கொள்ளுங்கள்

“வினை தீர்பவன் விநாயகன்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here