வீட்டில் பணம், பொன், பொருள் சேர! வெறும் கண்டங்கத்தரி இலை போதும்!

- Advertisement -

நாம் எந்த காரியங்கள் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டு தான் அந்த காரியங்களையே தொடங்குவோம் ஏனென்றால் முதல் கடவுள் விநாயகரே தொட்டு தொடங்கும் எந்த காரியமும் கெட்டுப் போவதில்லை என்று சாஸ்திரங்களும் புராணங்களும் நமக்கு கூறுகின்றனர். அதனாலயே நாம் புதியதாக ஏதேனும் ஒப்பந்தங்கள் போடும் போது கூட பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம். இப்படி முதற்கடவுள் விநாயகர் நாம் சில பொருட்களை வைத்து அர்ச்சனை செய்வதன் மூலம் அவர் நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் அதைப்பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணப் போகிறோம்.

பிற தெய்வங்களின் ரூபம்

விநாயகர் அவரின் ஒரு கையில் அவர் பாசுசத்தை தை்திருப்பார் இது படைத்தலை குறிக்கும் என்பதால் விநாயகரே பிரம்மாவாக காட்சி தருகிறார். இன்னொரு கையில் தந்தம் ஏந்திய நிலையில் இருப்பார் இது காத்தலை குறிப்பதால் இவரை மகாவிஷ்ணுவாகவும் காட்சி தருகிறார். மற்றோரு கையில் அங்குசம் ஏந்திருப்பார் இது அழித்தலை குறிக்கிறது அதனால் இவரும் ருத்ரராகவே காட்சி தருகிறார். மற்றொரு கையில் மோதகம் இருந்திருப்பார் அது சர்வ சக்தி படைத்தவரான பரமேஸ்வரன் ஆகவும் நமக்கு காட்சி தருகிறார். இப்படி அனைத்து கடவுள்களின் ரூபத்தையும் விநாயகரிடம் பார்ப்பதால் விநாயகருக்கு உகந்த ஒரு சில இலைகளை வைத்து நாம் அர்ச்சனை செய்யும் போது அவர் நம் கஷ்டங்களை தீர்த்து வைக்கிறார்.

- Advertisement -

பொதுவாக அனைவரும் விநாயகருக்கு தங்கள் கைகளால் செய்து போடும் மாலை அவருக்கு படைக்கும் பொருள் என்றால் அருகம்புல் தான். விநாயகருக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருள் இதைத்தவிர அவருக்கு பூஜைக்காக பயன்படுத்தும் பல பொருள்கள் உள்ளது.

-விளம்பரம்-

இலையும் அதன் பலனும்

  • மருத இலையை பயன்படுத்தி விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் குழந்தை பெற்றுக் கொள்வது சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
  • எருக்க இலையை பயன்படுத்தி வியாகரக்கு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • அர இலையை பயன்படுத்தி விநாயகருக்கு அர்ச்சனை செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் எதிரிகளின் தொல்லை நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
  • அகத்தி இலையை பயன்படுத்தி விநாயகருக்கு அர்ச்சனை செய்யும்போது உங்கள் வாழ்வில் இருக்கும் கவலைகள் எல்லாம் காற்றோடு காற்றாக பறந்து விடும்.
  • அரளி இலையை பயன்படுத்தி அர்ச்சனை செய்து வந்தால் உங்கள் வீட்டிலும், உங்கள் இடத்திலும் அன்பு நிலையாக இருக்கும்.
  • வில்வ இலையை பயன்படுத்தி விநாயகருக்கு அர்ச்சனை செய்து வந்தால் இன்பம் வந்து சேரும்.
  • வெள்ளெருக்கு இலையை பயன்படுத்தி விநாயகருக்குைஅர்ச்சனை செய்து வநதால் கஷ்டம் தீர்ந்து சகல சௌபாக்கியமும் உங்களுக்கு கிடைத்தே தீரும்.
  • மாதுளை இலையை பயன்படுத்தி விநாயகருக்கு அர்ச்சனை செய்யும்போது கீர்த்தி உண்டாகும்.
  • கண்டங்கத்திரி இலையை பயன்படுத்தி விநாயகர் அர்சனை செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி கடாட்சம் உள்ள வீட்டில் பணம், பொன், பொருள் என அனைத்தும் சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here