விநாயகருக்கு இந்த பூஜை செய்தால் நீங்கள் தொட்ட காரியம் எல்லா வெற்றி தான்!

- Advertisement -

நம் வாழ்க்கையில் சரி, நாம் நினைத்த காரியங்களும் சரி, நாம் கையில் எடுக்கும் காரியங்களும் சரி அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்குமா என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எடுத்த காரியங்களிலும் வாழ்விலும் வெற்றி கிடைப்பதற்கு ஆன்மீக ரீதியான ஒரு வழி உண்டு. ஆம், இந்து புராணத்தின்படி அனைத்திற்கும் முதல் கடவுள் என்பவர் விநாயகர் தான் பிற கடவுள் கூட எந்த காரியம் செய்தாலும் விநாயகரை வழிபட்டு விட்டு தான் அந்த காரியத்தை நடத்துவார்கள்.

-விளம்பரம்-

கடவுள்கள் மட்டுமில்ல நாமும் இப்பொழுது கூட எந்த விஷயத்தை செய்தாலும் முதலில் முதல் கடவுள் விநாயகரை வழிபட்டு விட்டு தான் அடுத்த கடவுளை வழிபடுவோம். ஆகையால் விநாயகரை வழிபட்டு அவருக்கு விருப்பமான இந்த பொருளை தொடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் கையில் எடுக்கும் காரியங்களும் வெற்றி கிடைக்கும். அதைப்பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு வாய்ப்பு கிடைத்தால் தான் அவர்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியும். அப்படி நம்மை பிடிக்காத சில நபர்கள் அவர்களது சூழ்ச்சிகளாலும் வன்மத்தினாலும் நமக்கு வரும் வாய்ப்புகளை தட்டி விட்டு நம்மை முன்னேறி விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் நமக்கு வரும் வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். அதனால் நாமும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலைமை வரும்.

ஆனால் விநாயகரின் இந்த பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும் உங்களை நேரடியாக எதிர்ப்பவராக இருந்தாலும் சரி சூழ்ச்சியினால் மறைமுகமாக இருந்து எதிர்ப்பவராக இருந்தாலும் சரி அவர்களால் உங்களது வெற்றியை தடுக்கவும் முடியாது அவ்வளவு மகத்துவம் வாய்ந்த பொருள் அது. ஆம் விநாயகரின் அம்சம் போருந்திய அருகம்புல் தான் இந்த அருகம்புல்லை பற்றியும் இதன் சத்திய பற்றியும் இந்து புராணங்கள் பல இடத்தில் தெளிவாக கூறுகின்றனர். அதனால் விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல்லை நாம் தொட்டு வணங்கும் பொழுது நமக்கு வெற்றிகள் மட்டுமே கிட்டும்.

அதனால் தினமும் காலை எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு பின் பூஜை அறையை சுத்தம் செய்து விநாயகரின் திருவுருவப்படத்திற்கு முன்பு விளக்கை ஏற்றி விளக்கிலிருந்து நன்கு ஒளி வீசும் படி எரிய விட்டு. விநாயகர் படத்தின் முன்பு அமர்ந்து கையில் அருகம்புல் வைத்துக் கொண்டு 48 முறை “ஓம் கணேசாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்து. இன்று நான் கையில் எடுக்க கூடிய காரியம் வெற்றி பெற வேண்டும், நான் நினைத்தது நடக்க வேண்டும் என மனதார விநாயகரிடம் வேண்டிக் கொண்டு.

-விளம்பரம்-

பின் அந்த வேலையை செய்தால் கண்டிப்பாக வெற்றி உங்களுக்கு கிட்டும். அதனால் தினமும் எதை மறந்தாலும் அருகம்புல்லை தொட்டு விநாயகருக்கு செய்யும் இந்த பூஜையை மறக்காமல் செய்பவர்களுக்கு வாழ்விலும் சரி எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் சரி உங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here