Home ஸ்வீட்ஸ் தித்திக்கும் சுவையில் தர்பூசணி தோல் அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

தித்திக்கும் சுவையில் தர்பூசணி தோல் அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

கோடை நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் பத்தாத அளவில் தாகமானது எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் தவிர் உடலை நீரேற்றதுடன் வைத்திருக்கும் பழங்கள், காய்கறிகளும் இந்த நேரத்தில் பலரும் விரும்பி சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்கிறார்கள். கோடை காலத்துக்கு சாப்பிட உகந்த பழங்களாக சிலவற்றை தவறாமல் சாப்பிடும் நாம், அதிலிருந்து வித்தியசமான உணவுகளை தயார் செய்தும் சாப்பிடலாம். தண்ணீர் தாகத்தை கட்டுப்படுத்தும் தர்பூசணி பழத்தை நறுக்கி அப்படியே நேரிடியாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதை அரைத்து ஜூஸாக்கியும் பருகி உடலின் உஷ்ணத்தை தணித்து கொள்கிறோம். தர்பூசணி பழத்தை வைத்து மேற்கூறிய விஷயங்களை தவிரத்து வேறு என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கான டிஷ்ஷாக இந்த தர்பூசணி தோல் அல்வா உள்ளது.

-விளம்பரம்-

நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும் அப்படித்தான் மிகவும் சுவையான ஒரு அல்வா தான் அதுவும் தர்பூசணி தோலில் அல்வா. நாம் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டிருப்போம் ஆனால் அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் சாப்பிட்டிவிட்டு தோலை தூக்கி போட்டிடுவோம். இந்த ரெசிபியை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நீங்கள் எப்போதும் அந்த தோலை தூக்கியே போடமாட்டீர்கள்.

Print
5 from 1 vote

தர்பூசணி தோல் அல்வா | Watermelon Halwa Recipe In Tamil

கோடை நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் பத்தாத அளவில் தாகமானது எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் தவிர் உடலை நீரேற்றதுடன் வைத்திருக்கும் பழங்கள், காய்கறிகளும் இந்த நேரத்தில் பலரும் விரும்பி சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்கிறார்கள். கோடை காலத்துக்கு சாப்பிட உகந்த பழங்களாக சிலவற்றை தவறாமல் சாப்பிடும் நாம், அதிலிருந்து வித்தியசமான உணவுகளை தயார் செய்தும் சாப்பிடலாம். தண்ணீர் தாகத்தை கட்டுப்படுத்தும் தர்பூசணி பழத்தை நறுக்கி அப்படியே நேரிடியாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதை அரைத்து ஜூஸாக்கியும் பருகி உடலின் உஷ்ணத்தை தணித்து கொள்கிறோம். தர்பூசணி பழத்தை வைத்து மேற்கூறிய விஷயங்களை தவிரத்து வேறு என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கான டிஷ்ஷாக இந்த தர்பூசணி தோல் அல்வா உள்ளது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Watermelon Halwa
Yield: 3 People
Calories: 64kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தர்பூசணி தோல்
  • 1/2 கப் சர்க்கரை
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் சிகப்பு புட் கலர்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 10 முந்திரி

செய்முறை

  • முதலில் தர்பூசணியின் பச்சை தோலை நீக்கி விட்டு வெள்ளை நிறத்தில் இருக்கும் தோல் பகுதியை மட்டும் துருவி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் பால் மற்றும் சோள மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை‌ அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரியை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் துருவி வைத்திருக்கும் தர்பூசணி தோல்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் சிவப்பு கலர் சேர்த்து நன்கு வதக்கவும். இது மசிந்து வந்ததும் அத்துடன் கலந்து வைத்திருக்கும் சோள மாவு கலவை, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் சர்க்கரை முழுவதும் கரைந்து கடாயில் ஒட்டாமல் சேர்ந்து வரும் பொழுது நெய் சேர்த்து ஒரு வாட்டி கலந்து பின் ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தர்பூசணி தோல் அல்வா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 64kcal | Carbohydrates: 12g | Protein: 9g | Fat: 2g | Sodium: 99mg | Potassium: 668mg | Fiber: 6g | Sugar: 10g | Vitamin A: 14IU | Vitamin C: 21mg | Calcium: 54mg | Iron: 7.3mg

இதனையும் படியுங்கள் : கோடைகால சீசனில் தர்பூசணி,ஆரஞ்சு வாங்கி சூப்பரான ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!