Home ஆன்மிகம் 12 ராசிகளுக்கான இந்த வார முழு ராசிபலன் 31/07/2023 முதல் 06/08/2023 வரை!

12 ராசிகளுக்கான இந்த வார முழு ராசிபலன் 31/07/2023 முதல் 06/08/2023 வரை!

rasi

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் பதட்டமே இல்லாமல் இந்த வாரத்தை கடந்து செல்லப் போகிறீர்கள். இடியே வந்து தலை மேல் விழுந்தாலும் எனக்கென்ன என்று தான் இருக்கப் போகிறீர்கள். அந்த அளவுக்கு ஒரு அமைதி. என்ன காரணம் தெரியுமா. எல்லாம் கடவுளின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை தான். இருந்தாலும் வாழ்க்கை துணையிடம் பேசும் போது கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும். ரொம்பவும் கோபப்படக்கூடாது. தினமும் அம்மன் கோவிலுக்கு செல்வது மனநிறைவை கொடுக்கும்.

-விளம்பரம்-
rasi

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. அடுத்தவர்கள் உங்களை புகழாமல் இருக்க மாட்டார்கள். உங்களால் அந்த புகழை காதில் வாங்காமல் இருக்க முடியாது. சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் மிதக்க போகிறீர்கள். எல்லாம் சரிதான். ஆனால், பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை நம்பி இருந்ததை எல்லாம் இழக்கக்கூடிய சூழ்நிலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே பெண்களும் யாரை நம்பியும் பணம் காசை வெளியில் கொடுக்காதீங்க. தினமும் அம்மன் கோவிலுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றினால் நன்மை நடக்கும்.

rasi

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் தைரியம் இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பீர்கள். ஆனால் செலவு தான் கொஞ்சம் கையை மீறி செல்லும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிக்கள் பிடுங்கள் இருக்கும் கூடவே. வேலை செய்பவர்கள் கூட எதிரியாக மாறலாம். அனுசரித்து தான் செல்ல வேண்டும். இந்த மாதம் 31 தேதியில் உங்களுக்கு சந்திராஷ்டமம். ஜாக்கிரதை, ஆடி வெள்ளியில் அம்மன் கோவிலுக்கு நெய் விளக்கு போட்டால் நன்மை நடக்கும்.

rasi

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் அயராது உழைக்க வேண்டும். போன போக்கில் எதையாவது சொல்லிவிட்டு சென்றால், அது மதிப்பை கொடுக்காது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் தடம் மாறி தடுமாறி போனவர்கள் கூட இனிமேல் ஒரு நல்ல வழிக்கு வந்து விடுவார்கள். வீட்டில் கெட்டி மேல சத்தம் கேட்கும். கணவன் மனைவிகிடையே அன்பு அதிகரிக்கும். இந்த வாரம் 2, 3 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம். அம்மனை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் மன நிம்மதி கிடைக்கும்.

rasi

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் வரப் போகின்றது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை வரும். அதை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். சொந்தத் தொழிலில், சில பார்ட்னர் நண்பர்களின் உண்மையான முகத்தை கண்டுபிடிக்கக்கூடிய நேரம் காலம் வந்து விட்டது. சொந்த தொழிலில் ஒரு சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைமை உண்டாகும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. ஓம் சக்தி மந்திரத்தை மனதிற்குள் சொல்லி வர நன்மை நடக்கும்.

-விளம்பரம்-
rasi

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரம் வாரமாக இருக்க போகின்றது. நீங்கள் எதை தொட்டாலும் அதில் வெற்றி தான். புதிய தொழில் தொடங்கலாம். புதியதாக வண்டி வாகனம் வாங்கலாம். புது வேலைக்கு செல்லலாம். புது வீட்டிற்கு செல்லலாம். இப்படி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக தான் அமையும். மாமியார் மருமகள் சண்டை போடாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடக்கனும். இல்லன்னா குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போகும். தினமும் அம்மன் கோவிலுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுப்பது நன்மையை தரும்.

rasi

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் இருக்கும். சுப காரிய செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. வீட்டுக்கு விருந்தாளிகள் வருவார்கள். குழந்தைகளின் போக்கில் ஒரு கவனத்தை வைக்க வேண்டும். அவர்கள் என்ன படிக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள் வருகிறார்கள், என்பதை பெற்றவர்கள் கவனித்துக் கொள்ளுங்கள். மருத்துவ செலவு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தினமும் அம்மன் கோவிலுக்கு சென்று மூன்று முறை வளம் வந்து நமஸ்காரம் செய்து வழிபாடு செய்தால் நன்மை நடக்கும்.

rasi

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டை செய்வீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். அது மட்டுமல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்த துணிமணிகள் நகைகளை வாங்கி கொடுப்பீங்க. எதிர்பாராத யோகம் நிச்சயம் உங்கள் கதவை தட்ட போகின்றது. அதில் இன்னும் மகிழ்ச்சி அடையப் போகிறீர்கள். இந்த நேரத்தில் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

-விளம்பரம்-
rasi

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கும். இதுநாள் வரை சொதப்பலாக இருந்த விஷயங்களை எல்லாம் சரி செய்ய முயற்சியை மேற்கொள்வீர்கள். இரும்பு வியாபாரிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஆசிரியர் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் உண்டு. நீண்ட தூர பயணம் வெற்றியைக் கொடுக்கும். தினமும் காலையில் எழுந்து உங்களுக்கு பிடித்த அம்மனை ஐந்து நிமிடம் பார்த்து மனதை அமைதிப்படுத்தி கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

rasi

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை பளு இருக்கும். பிக்கள் பிடுங்கள் இருக்கும். எத்தனை வேலையை தாண்டினாலும் பிரச்சனை மட்டும் மாறவே மாறாது. ஆகவே இருக்கின்ற வேலையில் இருக்கும் மைனஸை எல்லாம், பிளஸ் ஆக மாற்றக்கூடிய வழியை பாருங்கள். பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். நிதானதோடு பேசுங்கள். தினமும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுவது நன்மையை கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தை மட்டும் குறைக்க வேண்டும். பெரியவங்க சின்னவங்க, அம்மா அப்பா, என்று பார்க்காமல் எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசக்கூடாது. நமக்கு வந்தால் ரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. அப்படி என்று தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள். அனாவசியமான பேச்சு எகத்தாள பேச்சு வாழ்க்கையில் பின்னோக்கி தள்ளிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கெட்ட பெயரை சம்பாதிக்காதீங்க. முடிந்தால் அம்பாள் கோவிலுக்கு கூழு காய்ச்சி ஊத்துங்க நன்மை நடக்கும்.

rasi

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சம்பளமே இன்னும் வரவில்லை அதற்குள் இவ்வளவு கடனா என்று சிந்திப்பீர்கள். ஒரு சில மாதத்தில் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். தினமும் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது நிம்மதியை தரும்