Home ஜோதிடம் ராசி பலன் நவம்பர் இந்த வார ராசி பலன் 27 ஆம் தேதி முதல் – டிசம்பர் 3...

நவம்பர் இந்த வார ராசி பலன் 27 ஆம் தேதி முதல் – டிசம்பர் 3 ஆம் தேதி வரை..!

மேஷம்

இந்த வாரம் நீங்கள் பல ரகசிய ஆதாரங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். வேலையில் இருக்கும் எவருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் காரணமாக சில வேலைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கலாம். இந்த வாரம், புதன் உங்கள் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் உங்களின் மகிழ்ச்சியான குணமும் அறிவுத்திறனும் கல்வியில் வெற்றி பெற நிச்சயம் உதவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். வாரப் பிற்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

-விளம்பரம்-

ரிஷபம்

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த வாரம் சந்திரன் பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் பணம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். இந்த வாரம் உங்கள் குடும்பத்தினருடன் சில பிரச்சனைகளால் பெரிய தகராறு ஏற்படலாம். கல்வி தொடர்பான அனைத்தையும் வார இறுதி வரை தள்ளிப் போடுவது நல்லதல்ல.

மிதுனம்

பல வகைகளிலும் அனுகூலமான வாரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறை வேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம், புதன் உங்கள் ஏழாம் வீட்டில் அமர்வதால், பெரும்பாலான மாணவர்கள் தங்கள் கல்வித் துறையில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனவே, இந்த வாரம், நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். இந்த வாரம் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

கடகம்

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். இந்த வாரம் ஒன்பதாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் திடீர் பண லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கடன்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களின் கனவு இந்த நேரத்தில் நனவாகும்.

சிம்மம்

வியாழன் உங்கள் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால், ஆரோக்கியத்தின் பார்வையில் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிக்கும் அளவுக்குப் பணவரவு இருக்கும். வாரப்பிற்பகுதியில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி யுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகமாக வைத்திருக்கும். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான சரியான திட்டங்களை எடுப்பீர்கள்.

-விளம்பரம்-

கன்னி

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். இந்த வாரம் யோசிக்காமல் உங்கள் பணத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது. இல்லையெனில் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். புதிய முதலீட்டாளர்களைப் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

துலாம்

பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரம் நீங்கள் தங்க நகைகள், வீடு-நிலம் அல்லது கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்யலாம், இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தரும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். இந்த வாரம் நீங்கள் ஏதேனும் பெரிய முடிவை எடுக்க வேண்டியிருந்தால், எதையும் இறுதி செய்வதற்கு முன் உங்கள் குடும்பத்தினரின் கருத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சனிபகவான் உங்களின் நான்காம் வீட்டில் அமர்வதால் இந்த வாரம் பலருக்கு பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்குப் பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

-விளம்பரம்-

தனுசு

பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மகரம்

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, குதூகலம் குடிகொள்ளும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து அல்லது நிலம் தொடர்பான ஏதேனும் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், இந்த வாரம் அதன் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். இந்த வாரம் உங்களின் தேவையான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் வருகையால் வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். இந்த நேரம் நிச்சயமாக உங்கள் தொழிலில் முன்னேற்றத்தைத் தரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். இந்த வாரம் அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். இந்த வாரம், உங்கள் குடும்பத்தினரும் உங்கள் நண்பர்களும் உங்களுடன் ஒரு தூணாக நிற்பார்கள்.

மீனம்

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு, இந்த வாரம் சாதகமாக இருக்கும். இந்த வாரம் சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. அதனால் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்க நேரும். இந்த நேரத்தில், உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.