ஒவ்வொரு வருடமும் ராசிகளுக்கான அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மாறும் அந்த வகையில் 2024 தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் மாறும் நிலைகள் ஒவ்வொரு ராசிகளையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்கும். இந்த தமிழ் புத்தாண்டில் புதன் சுக்கிரன் மற்றும் கேது பலராசிகளில் சஞ்சரிப்பார்கள். தமிழ் புத்தாண்டில் இந்த வருடம் குரோதி வருடம் பிறக்கிறது. இந்த வருடத்தில் கிரகநிலை அமைப்பு, கன்னியில் கேது, கும்பத்தில் செவ்வாய் மற்றும் சனி, மேஷத்தில் குரு மற்றும் சூரியன், மீனத்தில் சுக்கிரன், புதன் மற்றும் ராகு சஞ்சரிக்கிறது.
இந்த கிரக அமைப்புகளால் இந்த ஆண்டு உலக அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்பு எரிமலை சீற்றம் ரசாயன கழிவுகளால் விபத்து என இயற்கை சீற்றங்களால் வரும் பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இந்த இயற்கை சீற்றத்தால் மக்களிடையே ஒற்றுமை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை புதிய நோய்கள் இந்த ஆண்டு பரவினாலும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கைகளும் முன்கூட்டியே எடுக்கப்படும். மருத்துவத்தில் சில கண்டுபிடிப்புகள் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவும் இருக்கும். பெரியோர்களை மதித்தல், குலதெய்வத்தை வணங்குதல் மகான்களை கௌரவித்தல், எளியவருக்கு உதவுதல் என இந்த ஆண்டு இந்த நல்ல விஷயங்கள் யாவும் நடக்கும். இந்த தமிழ் புத்தாண்டில் ஒவ்வொரு ராசியினருக்கும் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
இந்த ஆண்டு உங்களுடைய வாழ்க்கையில் உயர்வுகள் ஏற்படும். உங்களுடைய திறமையை உணர்ந்த நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு என அனைத்துமே கிடைக்கும். உங்களுடைய கிரக அமைப்பின் காரணமாக உங்கள் கூடையே இருப்பவர்களுடன் கொஞ்சம் அனுசரித்து போக வேண்டும். சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் நிறைந்த உங்களுடைய குடும்ப வாழ்க்கை அமைதியாக நிம்மதியாக மகிழ்ச்சியாக மாறும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் சுபச் செலவுகள் வரும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த குலதெய்வ வழிபாடு விரைவில் கைகூடும். பண வரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கினால் அதில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் யோசித்து செய்தால் நல்லது. உங்களின் மேல் இடத்தில் உள்ளவர்களின் பேச்சை மீறி நீங்கள் எந்த காரியமும் செய்ய வேண்டாம். சொந்த வீடு சொந்தமான சொந்த கார் போன்றவைகளை வாங்கும் யோகம் அதிகரிக்கும். கலை மற்றும் படைப்பு திரையில் உள்ள கலைஞர்களின் திறமை அதிகரித்து அதற்கு ஏற்ற வாய்ப்புகளும் அதிகரிக்கும். வயிறு, செரிமான பிரச்சனைகள், முதுகு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.மாணவர்கள் பெற்றோர் பெரியவர்களின் வார்த்தைகளை மதிக்க வேண்டும். வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறுவதற்கு செந்தூர் முருகனை வழிபட்டு வரலாம்.
ரிஷப ராசி
இவ்வளவு நாட்கள் உங்களுக்கு பணியிடத்தில் இருந்த சூழ்நிலைகள் மாறி பல வகையான மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் இருக்கும் பொறுப்பில் அவசரப்படவோ அலட்சியமோ கூடாது கையெழுத்திடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் முக்கியமான சில பைல்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுவதற்கு உங்களுடைய துணையோடு வாக்குவாதங்கள் மேற்கொள்ளக்கூடாது. புதிய ஆடைகளும் ஆபரணங்களும் உங்களுக்கு வந்து சேரும். குடும்ப பிரச்சனைக்கு மூன்றாவது மனிதர்களை கூப்பிட கூடாது. பூர்வீக சொத்து லாபத்தை கொடுக்கும். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் லாபமும் வளர்ச்சியும் கிடைக்கும். மாணவர்கள் அவர்களின் திறமைக்கு ஏற்றபடி உயர்வுகளை பெறுவார்கள். அரசு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் அரசியலில் உள்ளவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும். சோம்பேறித்தனம் உங்களுக்கு பலவித சிக்கல் விலை ஏற்படுத்தும் அதனால் சோம்பேறித்தனத்தை குறைக்க வேண்டும். அவசியம் ஏற்படாத இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் கலை மற்றும் படைப்பு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் அதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தாமல் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்க்கரை மூட்டு தேய்மானம் காது மூக்கு தொண்டை பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். இன்னும் பல முன்னேற்றங்களை பெறுவதற்கு பஞ்சவடி அனுமானை வழிபடலாம்.
மிதுன ராசி
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பலவிதமான உயர்வுகள் உங்களுக்கு ஏற்படும். எதிலும் அலட்சியமோ அவசரமோ வேண்டாம் நிதானமாக செயல்படுங்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் வரும். அனுபவம் வாய்ந்தவர்களின் பேச்சை கேட்டு நடந்தால் நல்லதே நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு வந்தால் அதனை தவிர்க்காமல் ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் உங்களுக்கு வாழ்க்கை நன்றாக அமையும். உங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் இருந்து வந்த சுப காரியங்களின் தடைகள் நீங்கும். நீங்கள் செய்யும் தொழிலில் திடீர் மாற்றமும் உயர்வுகளும் ஏற்படும். குலதெய்வ வழிபாடு உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். புறம் பேசுபவர்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். கலை மற்றும் படைப்பு துறையில் உள்ளவர்கள் உங்களுடைய படைப்பை பொதுவெளியில் பகிர வேண்டாம். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பயணம் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். காது மூக்கு தொண்டை ரத்தநாள அடைப்பு கொழுப்புகள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஏழுமலையானை வழிபட்டு வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடக ராசி
இந்த ஆண்டு நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்காமல் தாமதமானாலும் கூடிய விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு என அனைத்துமே ஏற்படும். பொறுப்பு பதவி இடமாற்றம் என அனைத்துமே உங்களின் மனதிற்கு ஏற்றபடி அமையும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் சுபகாரிய தடைகள் நீங்க பெரியவர்கள் மற்றும் பெற்றோர்களின் வார்த்தைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வது மிகவும் சிறந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது சிறந்தது. உங்கள் தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கும் அரசியலில் உள்ளவர்களுக்கும் இப்பொழுது உள்ள காலம் அணுகூலமானதாக அமையும். உங்களின் கூடவே இருந்து கொண்டு உங்களுக்கு பிரச்சனைகளை கொடுப்பவர்களின் உறவை துண்டிப்பது மிகவும் சிறப்பானது. மாணவர்களின் திறமைக்கும் மனதிற்கும் ஏற்றவாறு உயர் கல்வி தேடி வரும். உங்களுடைய வாகனத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்வது நல்லது. தூக்கமின்மை பல் வலி தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் இன்னும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசி
இந்த ஆண்டில் நீங்கள் மிகவும் அமைதியாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் ஒருபோதும் அலட்சியமோ அவசரமோ கூடவே கூடாது. மேல் அதிகாரிகளிடம் மிகவும் பார்த்து பேச வேண்டும் தேவையில்லாமல் பேச வேண்டாம். வீன்கார்பத்தை தவிர்த்தால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பெருகும். வேறு யாருடைய ஆலோசனைகளையும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்த வேண்டாம். வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போனால் உங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுமை மிகவும் முக்கியம். தேவையில்லாத வாக்குறுதிகளை பிறரிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கலை மற்றும் படைப்பு திரையில் உள்ளவர்களுக்கு உயர்வுகள் நிச்சயமாக வரும். தொலைதூர பயணத்தில் கவனம் வேண்டும் கவனக்குறைவு இருந்தால் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஒற்றை தலைவலி மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே கற்பக கணபதியை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி ராசி
பணியிடத்தில் உங்கள் பெருமை மாறும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களால் ஏற்றங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையலாம். வேலைவாய்ப்பில் புதிய வேலைக்கு செல்வதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் குழந்தைகளை கண்டிப்பதில் நிதானம் தேவை. நீங்கள் செய்யும் தொழிலில் வளர்ச்சியில் ஏற்படும் பெரியவர்கள் பெற்றோர்களின் வார்த்தைகளை மதித்து நடக்க வேண்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு உத்தரவாதம் கிடைக்கும் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்தவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் அதிகம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொலைதூர பயணத்தில் உடன் வருபவர்களுடன் கொஞ்சம் பார்த்து இருக்க வேண்டும் அவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கி சாப்பிட வேண்டாம். தினமும் சிறிது நேரம் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். குதிங்கால் கண்கள் மற்றும் வயிறு உபாதைகள் போன்றவை ஏற்படும். இஷ்டப்பட்ட மகானை வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கை இன்பமாக மாறும்.
துலாம் ராசி
உங்கள் வார்த்தைகளில் பொறுமை இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். பணியிடத்தில் நீங்கள் பார்த்த வேலையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் துணையுடன் இருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை இன்பமாக மாறும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சை கேட்டு நடந்தால் குடும்ப வாழ்க்கை இனிமையாக அமையும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் கைக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலை நேரடியாக செய்வது நல்லது வேறு யாரையும் இடையே அனுமதிக்க வேண்டாம். நீங்கள் செய்யும் தொழிலில் உங்களுக்கு வெற்றிகள் மட்டுமே கிடைக்கும். பூமி சார்ந்த வர்த்தகங்களில் நிதானம் அவசியம். சட்டப் புறப்பு சம்பந்தமான விவகாரங்களில் ஒருபோதும் தலையிட வேண்டாம். அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு வளர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். வாக்குறுதி கொடுக்கும் போது கொஞ்சம் யோசித்து பிறகு கொடுக்க வேண்டும். கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு தேடி வரும் வாய்ப்பினை வீணாக வீணடிக்க வேண்டாம். மாணவர்கள் ஒரு நிலை மனதோடு இருக்க வேண்டும். பயணத்தில் நிதானம் அவசியம். தனியாக வெகு தூர பயணத்தை மேற்கொள்வது கொஞ்சம் சிக்கல் அதனால் யோசித்து செயல்படுங்கள். முதுகு நரம்பு கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். வாழ்க்கையில் வெற்றிகளை பெறுவதற்கு அங்காளம்மனை வழிபடுவது சிறந்தது.
விருச்சிக ராசி
இந்த ஆண்டு உங்களுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பதவி பொறுப்பு சம்பளம் என அனைத்துமே உயரும். மேலிடத்தில் உள்ளவர்களால் உங்கள் திறமை உணரப்பட்டு அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வேலை சம்பந்தமான பயணங்கள் அதிகரித்தாலும் அதனால் நீண்ட ஆதாயம் கிடைக்கும். சிவகாரியங்கள் சுலபமாக கைக்கூலி பிரிந்த உறவுகள் எல்லாம் ஒன்று சேர அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆடை ஆபரணம் மற்றும் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். புதியதாக ஏற்படும் நட்புகளுக்கு இடையே கொஞ்சம் கவனம் தேவை. கலை மற்றும் படைப்பு திரையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளுக்கு பஞ்சுமே இல்லாமல் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கூடவே இருப்பவர்களை உதாசினப்படுத்த கூடாது. மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து படிப்பது நல்லது. அரசு மற்றும் அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். ஒற்றை தலைவலி அஜீரணம் கால் வலி அடி வயிறு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் விலக பழனி ராஜா அலங்கார முருகனை வழிபடுவது சிறந்தது.
தனுசு ராசி
இந்த ஆண்டு நீங்கள் மிகவும் கவனத்தோடு செயல்பட்டால் கணிசமான நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சமயத்திலும் அவசரமோ அலட்சியமோ கூடவே கூடாது. மேல் அதிகாரிகளுடன் பேசும் பொழுது நாவடக்கம் வேண்டும்.வீண் கர்வத்துடன் பேசக்கூடாது. வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் குறைத்து போதும் போதும் என்று சொல்கின்ற அளவுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். துணையோடு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய பிறருடைய ஆலோசனைகளை கேட்பதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய வாரிசுகளால் உங்களுக்கு பெருமை கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களையும் ஆபரணங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உங்கள் வீட்டில் வரக்கூடிய சுப காரியங்களில் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் நீங்கள் உழைப்பை போட்டால் இருமடங்கு லாபம் ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகங்களில் கொஞ்சம் கவனம் தேவை. அரசு மற்றும் அரசியல் துறைகளில் உள்ளவர்களுக்கு அலட்சியம் கூடாது நிதானமோடு செயல்பட வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். மற்றும் படைப்பு திரையில் உள்ளவர்கள் தங்களுடைய படைப்புகளை பெருமைக்காக வெளியில் சொல்ல வேண்டாம். இரவு நேரங்களில் வெளியில் தங்குவதை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது கவனம் அவசியம் பிறர் தரும் உணவுகளை ஒருபோதும் வாங்க வேண்டாம். கடையில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற பானங்களை பருக வேண்டாம். அடிவயிறு கழிவு உறுப்பு ஏற்படலாம். எனவே நரசிம்மரை வழிபடுவது சிறந்தது.
மகர ராசி
எண்ணங்கள் அனைத்தும் ஈடேற கூடிய ஆண்டு. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுடைய திறமை உரியவர்களால் உணரப்பட்ட அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணபடியே மாறிவிடும். உடன் இருப்போம் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்த்துக் கொள்ளவும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வந்தால் அதனை தவிர்க்காமல் செல்வது நல்ல பலன்களை தரும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பெற உங்கள் பொறுப்புகளை தவிர்க்காமல் நடந்து கொள்ளுங்கள். உறவுகளுக்கு இடையே தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம். உங்கள் வீட்டில் தொடர்ச்சியாக சுப காரியங்கள் நடந்தேறும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வரும். குழந்தைகளால் உங்களுக்கு பெருமைகள் வந்து சேரும். புதிய வீடு வாகனம் மற்றும் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தம்பதியினர் இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். வர்த்தகம் வணிகம் அனைத்திலும் லாபம் கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த தொழிலில் மட்டும் முதலீடு செய்வது நல்லது. வர்த்தக நிபந்தனைகளை ஒருபோதும் மீற வேண்டாம். அரசியலில் உள்ளவர்களுக்கு பெருமை புகழ் போன்றவைகள் அதிகரிக்கும். சட்ட பிரபான விஷயத்தில் யாருக்காகவும் தலையிடக்கூடாது. மாணவர்கள் மறதியை மறக்க தினந்தோறும் படிக்க வேண்டும். முதுகு கழுத்து அடிவயிறு மற்றும் நரம்புகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். வாழ்க்கையில் வெற்றிகளை பெறுவதற்கு பிள்ளையாரை வழிபடலாம்.
கும்ப ராசி
நீங்கள் அடக்கமாக இந்த ஆண்டு செயல்பட்டால் உங்களுக்கு எல்லாவற்றிலும் நன்மை மட்டுமே கிடைக்கும். வெளி பார்க்கும் இடத்தில் நீங்கள் பணிவாக நடந்து கொண்டால் பொறுப்புகள் நேரடியாக உங்களுக்கு வரும் அந்த பொறுப்புகளை நீங்கள் நேரடியாக கவனிக்க வேண்டும் யாருடைய வார்த்தைகளையும் ஒருபோதும் தவிர்க்க வேண்டாம். உங்கள் உடல் இருப்போரின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உங்களின் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் அதற்கு நீங்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும் அது நிலைக்க நீங்கள் விட்டுக் கொடுத்து போவது வேண்டும். உங்களின் உறவுகளிடமும் நண்பர்களிடமும் தேவை இல்லாத பேச்சுக்கள் கூடாது. விளைவு இருந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் மூன்றாம் நபரை உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்க வேண்டாம் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு அமைதியாக அவர்களுக்கு நன்மையை செய்யலாம். உங்களுடைய வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். உங்களுடைய தொழிலில் திடீரென வளர்ச்சியை ஏற்படும் அந்த சமயத்தில் நீங்கள் சற்று அதிகமாக உழைக்க வேண்டும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. தேவையில்லாத வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். அரசியல் துறையில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கையெழுத்து போடும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கலைஞர்கள் மற்றும் படைப்பு துறையில் உள்ளவர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும் அதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படித்தால் அது சோம்பலை விரட்டி உங்கள் படிப்பில் மிகுந்த நாட்டத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் நரம்பு பாதை படபடப்பு போன்றவைகள் ஏற்படலாம் தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் மனதிற்கு நல்லது. வாழ்க்கையில் இன்னும் வெற்றிகளை பெறுவதற்கு சிவன் பார்வதியை வணங்க வேண்டும்.
மீன ராசி
அலுவலகத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் அதற்கான பலன்கள் கிடைக்கும் அதற்காக உங்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்று அனைத்து விஷயங்களையும் அலட்சியமாக செய்யக்கூடாது கொஞ்சம் கவனம் தேவை. தலை கனத்தை தவிர்த்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் அதனால் உறவுகள் வருகை மகிழ்ச்சியை தரும். பணம் கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வைத்தால் பிற்காலத்தில் அது நல்லது. பிறமொழி பேசும் மனிதர்களால் உங்களுக்கு சில ஆதாயம் கிடைக்கும். வர்த்தகத்தில் வளர்ச்சி பெற உழைப்பு மிகவும் முக்கியம். சில ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதற்கு முன்பாக பலமுறை அதனை படிக்க வேண்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவும் கிடைக்கும். புதியதாக தொழிலில் முதலீடு செய்யும் போது மிகவும் நிதானதோடு செய்ய வேண்டும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். சட்டதிட்டங்களை மீறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது மாணவர்களுக்கு மதிப்பும் அதிகமான மதிப்பெண்ணும் கிடைக்கும். வின் சகவாசத்தை தவிர்த்தால் மிகவும் நல்லது. அல்சர் அலர்ஜி காது மூக்கு தொண்டை பிரச்சனைகள் வரலாம் எனவே கோதண்டராமரை வழிபடுவது உங்களுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கும்.
இதனையும் படியுங்கள் : சித்திரை மாதத்தில், வீரம் தைரியம் பலம் என அனைத்தையும் பெற்று அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் இந்த ஐந்து ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.