Home ஆன்மிகம் இந்த பத்து பொருட்களை பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது!

இந்த பத்து பொருட்களை பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது!

திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து சில பொருட்களை புகுந்த வீட்டிற்கு சீதனமாகவோ அல்லது தேவைக்கு கூட எடுத்துச் செல்ல கூடாத என்று நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி என்னென்ன பொருட்களை எடுத்து செல்ல கூடாது எதற்காக எடுத்து செல்ல கூடாது என்று அதன் காரணத்துடன் இந்த செய்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பிறந்த வீட்டில் இருக்கும் அரிசி அளக்க உதவும் படியை எடுத்து வருக்கூடாது. எனனென்றால் குடும்பத்தின் தானியங்களை நிர்ணயிக்கும் படியாக கருதப்படும் இதை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து வந்தால் பிறந்த வீட்டிற்கு வறுமையை ஏற்படுத்தும்.

பிறந்த வீட்டில் பயன்படுத்திய விளக்குகள் அதாவது பூஜை அறையில் பயண்படுத்திய விளக்கு, வரவேற்பு அரையில் பயன்படுத்திய விளக்காக இருந்தாலும புகுந்து வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது. விளக்கு வீடு முழுவதும் வெளிச்சத்தை கொடுத்து நேர் வினைகளை ஏற்படுத்தியிருக்கும் அதை எடுத்து சென்று விட்டுடால் பிறந்த வீட்டில் இருள் சூழ்ந்துவிடும்.

அரிசி புடைப்பதற்காக நாம் பயன்படுத்தப்படும் சோளவை எடுத்து வரக்கூடாது. முறத்தை திருமண சீதனமாகக் கூட வாகி தர மாட்டார்கள். ஏனென்றால் இறுதி சடங்கிற்கு சோளவு பயன்படுத்தப்படும்.

திருமணமான பெண்கள் தங்கள் அம்மா வீட்டிற்கு செல்லும் போது அசைவ உணவுகளை நன்றாக சாப்பிடலாம் ஆனால் எடுத்து வரக்கூடாது.

-விளம்பரம்-

சில பெண்கள் அவர்கள் வீட்டு பக்கத்தில் கோலமாவு கிடைக்காத பட்சத்தில் அதை பிறந்த வீட்டிற்கு சென்று எடுத்து வருவார்கள். கோலமாவை எடுத்து வாங்கள் ஆனால் இலவசமாக எடுத்து வராதீர்கள். அதற்கான பணத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டு வாருங்கள்.

புதியதாக திருமணமான மனமக்களுக்கு மளிகை பொருட்களை சீதனமாக கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி நாம் கொடுக்கும் மளிகை பொருடகளில் புளியை தவிர்த்து விடுங்கள். புளியை சீதனமாகவோ அல்லது கடனாகவோ கொடுத்தால் உறவுகளுக்கு இடையில் விரிசல் ஏற்படும்.

கூர்மையான பொருட்களான அரிவாள், கத்தி, அரிவாள் மனை, ஊசி போன்றவற்றை எடுத்துச் செல்ல கூடாது. இதனால் இரு வீட்டிற்கும் பகைமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

-விளம்பரம்-

அம்மா வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முருங்கைப்பூ போன்றவற்றையும் மேலும் பாகற்காய், அகத்திக்கீரை, கருவேப்பிலை இதையும் எடுத்து வரக்கூடாது. இதனால் பல கசப்பான விஷயங்கள் ஏற்படும்.

பிறந்த வீட்டை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் துடைப்பம், முறம், மாப் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. இதனால் இரு வீட்டினருக்கும் இடையில் சில பிரச்சினை வரலாம்.

கல் உப்பு மற்றும் எண்ணெய் இந்த இரண்டு பொருட்களையும் கூட எடுத்து வரக்கூடாது. இதனாலும் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படகூடும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here