வாழ்வில் வெற்றி பெற மரண படுக்கையில் லட்சுமணனுக்கு ராவணன் சொன்ன 3 ரகசியம் !

- Advertisement -

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் நமக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை சிறப்பாக உணர்த்துகிறது. இராமன் மூலம் ஒழுக்கத்தையும், சீதை மூலம் கற்பு நெறியையும், இலட்சுமணன் மூலம் பாசத்தையும், ஆஞ்சநேயர் மூலம் பக்தியையும், இராவணன் மூலம் வீரத்தையும், வன்மத்தையும் இப்படி இராமயணத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம்முள் இருக்கும் குணங்களை பிரதிபலிப்பார்கள்.

-விளம்பரம்-

வாழும் வரை ஒரு வீரனாகவும், மன்னனாகவும் வாழ்ந்த இராவணன் இறக்கும் தருணத்தில் குருவாக இருந்து விட்டு இறந்தார். அவர் குருவாக இருந்தது இராமனின் தம்பி இலட்சுமணனுக்கு. மரண படுக்கையில் அவர் இலட்சுமணனுக்கு சொன்ன இரகசியத்தைப் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

இராவணன் யார்?

ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன். இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன. இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.

இராமாயணம் கூற்று

பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவர் பல பெண்களை மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராவணன் ஆட்சி

இராவணன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை.

-விளம்பரம்-

இராவணனின் அழிவு

சீதை இராவணனுடைய மகளோ அல்லது இல்லையோ, இராவணனின் அழிவுக்கு காரணம் சீதை மட்டுமே. தன்னுடைய மகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற தந்தைப் பாசத்தின் காரணமாகவே, இராவணன் சீதா தேவியை இராமருக்குத் தர மறுத்தார் என்றும் சொல்கிறார்கள். சீதா தேவி மீண்டும் காட்டுக்கு சென்று துன்பப்படுவதை இராவணன் விரும்பவில்லை. எனவே தான், இராமருடன் யுத்தம் செய்து, சோதிடர்களின் கூற்றுப்படி உயிரை விடவும் செய்தார் இராவணன்.

லட்சுமணனுக்கு இராவணன் போதித்த இரகசியம்

இரகசியம் 1

எந்தவொரு சுபகாரியத்தையும் செய்ய காலம் தாழ்த்தக்கூடாது, அதேபோல தப்பான செயல்களை எவ்வளவு தாமதமாக செய்ய முடியுமோ அவ்வளவு தாமதமாக செய்ய வேண்டும். இராமரை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு குடிலுக்கு வந்து சீதையை கவர்ந்து வந்தததால்தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறினார்.

-விளம்பரம்-

இரகசியம் 2

உன் எதிரியை எப்பொழுதும் குறைவாக மதிப்பிடாதே. இராவணன் பிரம்மரிடம் மரணம் இல்லா வரம் வாங்கியபோது மனிதர்கள் மற்றும் குரங்குகள் தவிர மற்ற எவற்றாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் வாங்கினார். ஏனெனில் தன்னை வதைக்கும் தகுதியோ, சக்தியோ மனிதர்களுக்கு இல்லை என்று அவர்களை குறைவாக மதிப்பிட்டதே தன் அழிவுக்கு காரணம் என கூறினார்.

இரகசியம் 3

உன் எந்தவொரு ரகசியத்தையும் எப்போதும் யாரிடமும் கூறாதே. தன் மரண ரகசியத்தை தன் சகோதரன் விபீஷணனிடம் பகிர்ந்து கொண்டதே தன் வீழ்ச்சிக்கு காரணம் எனவே ஒருபோதும் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறி இலட்சுமணை ஆசிர்வதித்து விட்டு உயிர்விட்டார் இராவணன்.

இதனையும் படியுங்கள் : குல தெய்வத்தை வீட்டுக்கு வர வைக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!