குல தெய்வத்தை வீட்டுக்கு வர வைக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!

- Advertisement -

நாம் அனைவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு கடவுள் இருப்பார்கள் அந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு பெண் கடவுளாக இருப்பார்கள் ஒரு சிலருக்கு ஆண் கடவுளாக ஆக இருப்பார்கள் ஆனால் அனைவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு கடவுள் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களும் நம் குலத்தில் பிறந்து வளர்ந்து நாம் குலத்தை காப்பதற்கு கடவுளாக மாறியவர்கள் தான். இந்த குலதெய்வம் என்பவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது ஒரு வினாடியில் உங்களுக்கு உணர்த்தி விடலாம் உங்களுக்கு இஷ்ட தெய்வமாக விஷ்ணு, சிவன், பிரம்மா, மகாலட்சுமி, மாரியம்மன், பராசக்தி என யாராக இருந்தாலும் சரி அவர்களிடம் நீங்கள் வேண்டுதல்கள் பிரார்த்தனைகள் உதவி என்று கேட்கும் போது. உங்கள் இஷ்ட தெய்வங்களே உங்கள் குலதெய்வத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தான் உங்கள் பிரார்த்தனை மற்றும் தேவையான உதவியே செய்ய முடியும்.

-விளம்பரம்-

உயிர் இழப்புகள் கூட ஏற்ப்படும்

அந்த அளவிற்கு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் ஒரு பாதுகாப்பு அறனாகவே விளங்க கூடியவர்கள் தான் இந்த குலதெய்வங்கள்.இப்படிப்பட்ட தெய்வங்களை நாம் மறக்கும் போதும், அவர்களின் கோவிலுக்கு செல்லாமல், பூஜை செய்யாமல் இருக்கும் பொழுது நம் வீட்டில் பல பிரச்சனைகள் உண்டாகும் அப்படி வரும் பிரச்சனைகளுக்கு காரணமே இருக்காது. எப்படியாவது ஒரு உருவில் பிரச்சனை உண்டாகிக் கொண்டே இருக்கும் ஒரு சில சமயங்களில் ஒரு சிறிய விபத்தாக இருக்கும் அந்த விபத்தில் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் கூட ஏற்படும் இதற்கு காரணம் குலதெய்வம் உங்கள் வீட்டில் இல்லை என்பதுதான். குலதெய்வம் உங்கள் வீட்டில் இருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் உங்களுக்கு முன் வந்து நின்று உங்களை காக்கும் அப்படிப்பட்ட குலதெய்வம் உங்கள் வீட்டில் இல்லை, உங்களுக்கு குலதெய்வம் யார் என்று தெரியாது என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் குலதெய்வத்தை வீட்டுக்கு வர வைக்க இந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்

- Advertisement -

குலதெய்வம் வீட்டிக்கு வர பரிகாரம்

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதனுடன் வாசனை திரவியங்களான பன்னீர் சிறிது, அத்தர், ஜவ்வாது போன்றவற்றை நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்படி வாசனை திரவியங்கள் கலந்து வைத்திருக்கும் தண்ணீரில் ஒரு சிவப்பு நிற துணியை முக்கி நன்றாக நனைத்து பின் உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த சிவப்பு நிற துணி நன்கு வாசனையுடன் இருக்கும். இந்த வாசனை மிகுந்த சிவப்பு துணியை விரித்து பின் மூன்று விரலி மஞ்சள் எடுத்து சிவப்பு நிற துணியில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் மூன்று விரலி மஞ்சளின் நுனிப்பகுதி சேதமாகாமல் முழுமையாக இருக்க வேண்டும். பின்பு இந்த சிவப்பு நிற துணியை ஒரு முடிச்சாக கட்டி அந்த முடிச்சுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்கள் வீட்டில் நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

தீப ஆராதனை மற்றும் தூபம்

அதன் பின்பு உங்கள் வீட்டில் சுவாமிக்கு தினமும் பூஜை செய்யும் போது கற்பூர தீபாரதனை, தூபம் காட்டும்போது இந்த முடிச்சிக்கும் சேர்த்து காட்டி பூஜை செய்து கொள்ளுங்கள். இதை தொடர்ந்து பதினோரு நாட்கள் செய்ய வேண்டும். இந்த முடிச்சு 11 நாட்கள் வீட்டுக்கு வெளியவே இருக்கும்போது இத்தனை நாட்களாக உங்கள் வீட்டு வ வாசல் வரை வந்து திரும்பி சென்ற குலதெய்வங்கள் அந்த மஞ்சளில் குடியேறி விடும். அதன் பின் 11 நாட்கள் கழித்து அந்த முடிச்சை உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் போதும் வாசலோடு நின்ற உங்கள் குல தெய்வம் உங்கள் வீட்டிற்குள் குடியேறி விடும். உங்கள் வீட்டில் குலதெய்வம் வந்த உடனே பாதி பிரச்சனைகள் முடிந்துவிடும்.

kuladeivam

கெட்ட சக்திகள் வெளியேறும்

இவ்வளவு நாட்களாக குலதெய்வம் இல்லாமல் இருந்ததால் உங்கள் வீட்டை கெட்ட சக்திகள், துர்சக்திகள், எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே ஆட்கொண்டிருக்கும். அதன் காரணமாகத்தான் காரணமே இல்லாமல் பிரச்சினைகளும், சிறு சிறு பிரச்சனைகள் கூட மிகப் பெரிய பிரச்சனைகளாக வெடித்து வீடு சின்ன பின்னமாக மாறி இருக்கும். உங்கள் வீட்டிற்குள் குலதெய்வம் காலடி எடுத்து வைத்த உடன் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறிவிடும் இதிலேயே உங்களுக்கு பாதி பிரச்சனை முடிந்துவிடும். அடுத்து வரக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு முன் வந்து நின்று உங்களை காத்தருளும். இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மாலை ஆறு மணிக்கு தான் செய்ய வேண்டும். இதை மட்டும் சரியாக செய்து விடுங்கள் குல தெய்வதன் பரிபூரண ஆசியும் அருளும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு கஷ்ட காலங்கள், பிரச்சனைகள் வரும் பொழுது மட்டும் குலதெயவத்தை நினைக்காமல் நீங்கள் சந்தோஷமாக இருக்கும் பொழுது கூட குலதெய்வத்தை பூஜை செய்து வரலாம்.தினசரி வீட்டில் பூஜை செய்யும் போது கூட உங்கள் குல தெய்வத்தை நிகை்கலாம்.

-விளம்பரம்-