சுவையான புதினா சாதம் செய்வது எப்படி.

புதினா சாதம்
- Advertisement -

மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சாதம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.வயிற்று பிரச்சனை,சளி,கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். சமையலை மணமூட்டியாக கமகம என்று ஆக்குகிறது.பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.

-விளம்பரம்-

புதினா சாதத்தை பத்து நிமிடத்தில் சுலபமாகவும் சுவையாகவும் சமைத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் .

- Advertisement -

இந்த சாதத்தை மதிய உணவாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் குடுக்கலாம்.

புதினா சாதம்
Print
4 from 1 vote

புதினா சாதம் ரெசிபி

புதினா சத்தத்தை பத்து நிமிடத்தில் சுலபமாகவும் சுவையாகவும் சமைத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் .
இந்த சாதத்தை மதிய உணவாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் குடுக்கலாம்.
Active Time10 minutes
Total Time10 minutes
Course: புதினா சாதம்
Cuisine: Indian, இந்தியன்
Keyword: pudina sadam, புதினா சாதம்
Yield: 2 people
Calories: 70kcal

Equipment

  • கடாய் 1

தேவையான பொருட்கள்

  • 2 கப் அரிசி

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

  • 1 கப் புதினா
  • புளி சிறிதளவு
  • 2 பச்சைமிளகாய்
  • இஞ்சி இரண்டு துண்டு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்

  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 காஞ்ச மிளகாய்
  • 15to20 கப் முந்திரி பருப்பு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இரண்டு கப் அரிசியை வேகவைக்கவும்.

அரைப்பது.

  • ஒரு மிக்சியில் ஒரு கப் புதினா அதனுடன் சிறிதளவு புளி, இரண்டு துண்டு இஞ்சி, மற்றும் இரண்டு காஞ்ச மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
  • பிறகு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் சேர்க்கவும் எண்ணைய் சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அதனுடன் இரண்டு காஞ்ச மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பிறகு அதனுடன் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பின்பு அதனுடன் அரைத்த புதினா விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும்.
  • இரண்டு நிமிடம் வேகவைத்த பிறகு அதனுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.
  • இப்பொழுது சுவையான புதினா சாதம் தயார்.

Nutrition

Calories: 70kcal | Carbohydrates: 5g | Protein: 7g | Fat: 1g | Saturated Fat: 1g | Sodium: 1mg | Potassium: 16mg | Fiber: 32g | Vitamin C: 52mg | Calcium: 24mg | Iron: 28mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here