மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சாதம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.வயிற்று பிரச்சனை,சளி,கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். சமையலை மணமூட்டியாக கமகம என்று ஆக்குகிறது.பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
புதினா சாதத்தை பத்து நிமிடத்தில் சுலபமாகவும் சுவையாகவும் சமைத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் .
இந்த சாதத்தை மதிய உணவாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் குடுக்கலாம்.
-விளம்பரம்-
புதினா சாதம் ரெசிபி
புதினா சத்தத்தை பத்து நிமிடத்தில் சுலபமாகவும் சுவையாகவும் சமைத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் .இந்த சாதத்தை மதிய உணவாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் குடுக்கலாம்.
Yield: 2 people
Calories: 70kcal
Equipment
- கடாய் 1
தேவையான பொருட்கள்
- 2 கப் அரிசி
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
- 1 கப் புதினா
- புளி சிறிதளவு
- 2 பச்சைமிளகாய்
- இஞ்சி இரண்டு துண்டு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன் கடுகு
- 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 காஞ்ச மிளகாய்
- 15to20 கப் முந்திரி பருப்பு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் இரண்டு கப் அரிசியை வேகவைக்கவும்.
அரைப்பது.
- ஒரு மிக்சியில் ஒரு கப் புதினா அதனுடன் சிறிதளவு புளி, இரண்டு துண்டு இஞ்சி, மற்றும் இரண்டு காஞ்ச மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- பிறகு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் சேர்க்கவும் எண்ணைய் சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அதனுடன் இரண்டு காஞ்ச மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பிறகு அதனுடன் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின்பு அதனுடன் அரைத்த புதினா விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும்.
- இரண்டு நிமிடம் வேகவைத்த பிறகு அதனுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.
- இப்பொழுது சுவையான புதினா சாதம் தயார்.
Nutrition
Calories: 70kcal | Carbohydrates: 5g | Protein: 7g | Fat: 1g | Saturated Fat: 1g | Sodium: 1mg | Potassium: 16mg | Fiber: 32g | Vitamin C: 52mg | Calcium: 24mg | Iron: 28mg