பாகற்காய் பிடிக்காதவங்க கூட இந்த பாகற்காய் சிப்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க!

- Advertisement -

பொதுவா ஒரு சில காய்கறிகள் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது காரணம் அதனுடைய டேஸ்ட் அவங்களுக்கு பிடிக்காதுன்னு கூட சொல்லலாம். ஆனா பெரும்பாலும் பாகற்காய் நிறைய பேருக்கு பிடிக்கவே பிடிக்காது அதுக்கு காரணம் பாகற்காய் ரொம்பவே கசப்பா இருக்கும் பாகற்காய் குழம்பு செஞ்சாலும் கூட்டு செஞ்சாலும் என்ன செஞ்சாலும் சாப்பிடவே மாட்டாங்க ஆனா பாகற்காயில் நிறைய சத்துக்கள் இருக்கு.

-விளம்பரம்-

பாகற்காய சர்க்கரை உள்ளவங்க டெய்லி சாப்பிட்டு வந்தால் அவங்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டோட இருக்கும் அது மட்டும் இல்லாம பாகற்காய் உள்ள கசப்புத்தன்மை நம்ம வயித்துல இருக்குற கிருமிகள் பூச்சிகள் எல்லாத்தையுமே அழிச்சிடும் அப்படின்னு சொல்லுவாங்க அதனால பாகற்காய் நம் உடம்பிற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால எப்பவுமே பாகற்காய் வேண்டாம் அப்படின்னு ஒதுக்காம பாகற்காய சாப்பிடணும்.

- Advertisement -

அந்த வகையில் பாகற்காய் கசப்பே தெரியாம பாகற்காய் வைத்து சூப்பரான சிப்ஸ் தான் செய்யப் போறோம். ஒரு சிலருக்கு பாகற்காய் வைத்து புளி குழம்பு வச்சு சாப்பிட்டா ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு அந்த புளிக்குழம்பு கூட பிடிக்காது அப்படி சுத்தமா பாகற்காயை சாப்பிடாதவர்கள் கூட இந்த பாகற்காய் சிப்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க நல்லா மொறு மொறுன்னு காரசாரமா கசப்பே தெரியாமல் ரொம்பவே சூப்பரான கசப்பே இல்லாம இருக்கக்கூடிய  ஒரு பாகற்காய் சிப்ஸ் தான் இது.

இந்த பாகற்காய் சிப்ஸ் நம்ம தயிர் சாதம் ரசம் சாதம் பருப்பு சாதம் வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் சொல்லவே தேவையில்லை ரொம்ப சூப்பரா இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த பாகற்காய் சிப்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த மொறு மொறு கசப்பே இல்லாத பாகற்காய்ச்சல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

பாகற்காய் சிப்ஸ் | Bittergourd Chips Recipe In Tamil

பாகற்காய் கசப்பே தெரியாம பாகற்காய் வைத்து சூப்பரான சிப்ஸ் தான் செய்யப் போறோம். ஒரு சிலருக்குபாகற்காய் வைத்து புளி குழம்பு வச்சு சாப்பிட்டா ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்குஅந்த புளிக்குழம்பு கூட பிடிக்காது அப்படி சுத்தமா பாகற்காயை சாப்பிடாதவர்கள் கூட இந்தபாகற்காய் சிப்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க நல்லா மொறு மொறுன்னு காரசாரமா கசப்பேதெரியாமல் ரொம்பவே சூப்பரான கசப்பே இல்லாம இருக்கக்கூடிய  ஒரு பாகற்காய் சிப்ஸ் தான் இது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Bittergourd Chips
Yield: 5
Calories: 63kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 6 மீடியம் சைஸ் பாகற்காய்
  • 1 கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மீடியம் சைஸ் பாகற்காயில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • அதில் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
  • அதில் கடலை மாவு அரிசி மாவு, மிளகாய் தூள் சீரகத்தூள் கரம் மசாலா, மல்லித்தூள் எலுமிச்சைச்சாறுஉப்பு அனைத்தும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பாகற்காயை சேர்த்து நன்றாக வேக வைத்து பொன்னிறமானதும்எடுத்தால் சுவையான பாகற்காய் சிப்ஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 63kcal | Carbohydrates: 5.4g | Sodium: 23mg | Potassium: 296mg | Vitamin A: 471IU

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பாகற்காய் முட்டை புர்ஜி ஒரு முறை மட்டும் இப்படி செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!

-விளம்பரம்-