- Advertisement -
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீரங்களா? அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்பார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
-விளம்பரம்-
உருளைக்கிழங்கு ஆம்ப்லேட் | Potato Omelette Recipe In Tamil
Yield: 2 people
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 4 முட்டை
- உப்பு தேவைக்கேற்ப
- கொத்தமல்லி சிறிதளவு
- 4 பச்சைமிளகாய்
- 2 உருளைக்கிழங்கு
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- 2 வெங்காயம்
- வெண்ணெய் அல்லது ஆயில் தேவையான அளவு
செய்முறை
செய்முறை:
- முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்.
- அடுத்து முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
- இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்ப்லேட் போல் வேகவிடவும்.
- ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கம் வேகவைத்து எடுக்கவும்.
- இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு ஆம்ப்லேட் தயார்.
Nutrition
Carbohydrates: 10g | Protein: 4g | Fat: 9g | Saturated Fat: 1.5g | Cholesterol: 70mg | Sodium: 480mg
- Advertisement -