சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்ப்லேட்!

potato omelette
- Advertisement -

மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீரங்களா? அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்பார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

-விளம்பரம்-
potato omelette
Print
No ratings yet

உருளைக்கிழங்கு ஆம்ப்லேட் | Potato Omelette Recipe In Tamil

Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time11 minutes
Course: Breakfast, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: potato omelette, உருளைக்கிழங்கு ஆம்ப்லேட்
Yield: 2 people

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

  • 4 முட்டை
  • உப்பு தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 4 பச்சைமிளகாய்
  • 2 உருளைக்கிழங்கு
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • 2 வெங்காயம்
  • வெண்ணெய் அல்லது ஆயில் தேவையான அளவு

செய்முறை

செய்முறை:

  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்.
  • அடுத்து முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
  • இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்ப்லேட் போல் வேகவிடவும்.
  • ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கம் வேகவைத்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு ஆம்ப்லேட் தயார்.

Nutrition

Carbohydrates: 10g | Protein: 4g | Fat: 9g | Saturated Fat: 1.5g | Cholesterol: 70mg | Sodium: 480mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here