டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுக்க சுலபான மற்றும் ருசியான ஆலு புதினா பாத் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

ஆலூ புதினா பாத் ,இந்த உணவு வகை மிக மிக எளிதாக செய்து விடக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். லன்ச் பாக்ஸுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும்… ஒரே மாதிரியான ரெசிபிகளால் நாம் அனைவரும் சலிப்படையலாம்… அலுவலகம் செல்வோர் முதல் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவது முதல் சுலபமாக டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு போகக் கூடிய இந்த கோவை ஸ்பெஷல் ‘ஆலூ புதினா பாத் எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை தொடருங்கள்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

ஆலூ புதினா பாத் | Aloo Pudhina Bath Recipe In Tamil

ஆலூ புதினா பாத் ,இந்த உணவு வகை மிக மிக எளிதாக செய்துவிடக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். ஆலூபுதினா பாத் எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை தொடருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Yield: 4
Calories: 74kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 துண்டு இஞ்சி
  • சீரகம் சிறிது
  • 2 உருளை கிழங்கு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள் சிறிது
  • 1 கட்டு புதினா கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
  • உப்பு                                                                                                                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • பாசுமதி அரிசியை கழுவி ஒன்னுக்கு ஒன்னரை விரதம் தண்ணீர் வைத்து எலெக்ட்ரிக் குக்கர் அல்லது நார்மல்குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்து கொள்ளவும். உருளை கிழங்கை தோல் சீவி துண்டங்களாகநறுக்கி கொள்ளவும்.
  • அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு தாளித்து பச்சைமிளகாயை கீறி போட்டுவதக்கி அதில் நறுக்கிய உருளை கிழங்கை போட்டு எண்ணையிலேயே வேக விடவும்.
  • சீரகம் கிழங்குநன்றாக வெந்ததும் மிக்சியில் கழுவி சுத்தம் செய்த புதினா இஞ்சி மஞ்சள் தூள் போட்டுநன்றாக அடித்து எடுத்து வெந்த உருளை கிழங்கில் ஊற்றி உப்பு சேர்த்து ஒரு ரெண்டு நிமிடம்வதக்கி அடுப்பை ஆப் செய்யவும்.
  •  ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் சாதம் கொஞ்சம ஆலூபுதினா கலவை என்று எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவேண்டும். புதினா மிக்சியில்அடிதவுன் கிழங்கில் ஊற்ற வேண்டும் அப்போது தான் நல்ல பச்சை கலர் வரும் முதலிலேயே அடித்துவைத்தல் கருப்பாகி விடும்.
  • இந்த சாதம்புதினா ருசியுடன் கிழங்கும் சேர்த்து சாப்பிடும் போது மிக சுவையாக இருக்கும். இதற்கும்ரைத்தா நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 74kcal | Carbohydrates: 12.56g | Protein: 2.8g | Fat: 0.88g | Sodium: 2.67mg | Potassium: 165mg | Fiber: 1.65g | Calcium: 14.84mg | Iron: 0.68mg
- Advertisement -