Advertisement
சைவம்

காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

கத்திரிக்காய் அப்டினாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா ஒரு சிலருக்கு கத்திரிக்காய் வச்சு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. மீன் குழம்புல இந்த கத்திரிக்காய் போட்டாலும் ஏதாவது புளி குழம்புல இந்த கத்திரிக்காய் போட்டாலும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல ஃப்ரை செஞ்சு கொடுத்தா பெருசா விரும்பி சாப்பிட மாட்டாங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் காரசாரமான கத்திரிக்காய் ஃப்ரை செஞ்சு கொடுங்க அதுக்கு அப்புறம் அவங்களுக்கு கத்திரிக்காய் ரொம்பவே பிடிச்சு போயிடும்.

அந்த அளவுக்கு வெரைட்டி ரைஸ் கூட வெச்சு சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான காம்பினேஷன் அப்டின்னே சொல்லலாம். அதுவும் இந்த வெயில் காலத்துக்கு தயிர் சாதம் செஞ்சு அதுக்கு இந்த கத்திரிக்காய் ப்ரை செஞ்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரா இருக்கும். வெறும் பழைய சாதத்துக்கு கூட இந்த கத்திரிக்காய் பிரை வைத்து சாப்பிடலாம். எல்லா பழைய சாதமும் சட்டுனு காலியாகிடும் அந்த அளவுக்கு இந்த கத்திரிக்காய் ஃப்ரை பழைய சாதத்தை நமக்கு ஊட்டி விடும் அப்படின்னு சொல்லலாம். இவ்வளவு டேஸ்டா இருக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் பிரை ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களை எல்லாருமே பாராட்டுவாங்க அந்த அளவுக்கு இந்த கத்திரிக்காய் ஃப்ரையோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

Advertisement

உங்க கிட்ட இந்த கத்திரிக்காய் ப்ரை செய்ய சொல்லி வாங்கி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் ப்ரை உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். கத்திரிக்காய் சாப்பிடாத குழந்தைகளே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ஆந்திரா ஸ்டைல் காரசாரமான கத்திரிக்காய் ப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

ஆந்திரா கத்திரிக்காய் ஃப்ரை | Andhra Brinjal Fry In Tamil

Print Recipe
ஆந்திரா கத்திரிக்காய் ஃப்ரை, வெரைட்டிரைஸ் கூட வெச்சு சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான காம்பினேஷன் அப்டின்னே சொல்லலாம். அதுவும்இந்த வெயில் காலத்துக்கு தயிர் சாதம்
Advertisement
செஞ்சு அதுக்கு இந்த கத்திரிக்காய் ப்ரை செஞ்சுசாப்பிட்டா ரொம்ப சூப்பரா இருக்கும். வெறும் பழைய சாதத்துக்கு கூட இந்த கத்திரிக்காய்பிரை வைத்து சாப்பிடலாம். எல்லா பழைய சாதமும் சட்டுனு காலியாகிடும் அந்த அளவுக்கு இந்தகத்திரிக்காய் ஃப்ரை பழைய சாதத்தை நமக்கு ஊட்டி விடும் அப்படின்னு சொல்லலாம். இவ்வளவுடேஸ்டா இருக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் பிரை ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்ககண்டிப்பா உங்களை எல்லாருமே பாராட்டுவாங்க அந்த அளவுக்கு இந்த கத்திரிக்காய் ஃப்ரையோடடேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
Advertisement
Course Fry
Cuisine tamil nadu
Keyword Andhra Brinjal Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 128

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ கத்தரிக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல்
  • 5 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மல்லி விதைகள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  • பிறகு பூண்டு மல்லி விதைகள் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
     
  • அதே கடாயில் வேர்க்கடலை தேங்காய் துருவல், வெள்ளை எள் சேர்த்து நன்றாக வறுத்து அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • கத்திரிக்காயை நான்கு பக்கம் கீரி தண்ணீரில் சேர்த்து கழுவி எடுக்கவும். அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து கொஞ்சம் எடுத்து கத்திரிக்காயின் உள்ளே வைத்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் போட்டு தாளித்து கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளவும்
  • கத்திரிக்காய் கொஞ்சம் நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மீதி பொடியையும் சேர்த்து தேவையானஅளவு உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்தால் சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ஃப்ரை தயார்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : அடுத்தமுறை கத்திரிக்காய் லாங்கினால் இந்த மாதிரி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

3 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

10 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

19 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago