ரெம்ப எளிமையாக வீட்டிலயே தித்திக்கும் சுவையில் ஆப்பிள் ஜாம் செய்து பாருங்கள்!

- Advertisement -

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை வைத்து சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். மேலும் ஒரு தடவை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகிக்கலாம். இதனை பிரட் அண்ட் சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பிரெட்டையும், ஜாமையும் வாங்குவது எளிதான காரியமும் அல்ல. அதனை அவர்கள் எப்போது தின்று தீர்ப்பார்கள் என்பதனை நம்மால் ஊகிக்க முடியாது. அதோடு, ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் கூட பிரெட், ஜாம் வைத்து காலை உணவு சாப்பிடுவர். பிரெட், ஜாம் சுலபமான காலை உணவாகி விடுகிறது. அந்தவகையில் சந்தைகளில் கிடைக்கும் ஜாம்களில் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்கின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு எளிதாக வீட்டிலேயே ஜாம் செய்யலாம். வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

ஆப்பிள் ஜாம் | Apple Jam Recipe In Tamil

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை வைத்து சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். மேலும் ஒரு தடவை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகிக்கலாம். இதனை பிரட் அண்ட் சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Apple Jam
Yield: 3 People
Calories: 104kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 3 ஆப்பிள்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

  • முதலில் ஆப்பிளை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஆப்பிளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து ஆப்பிள் விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • பின் சக்கரை சேர்த்து நன்கு கலந்து, இது கொஞ்சம் கெட்டியானதும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கைவிடாமல் சிறிது நேரம் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • ஜாம்‌ நன்கு கெட்டியாகி அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் அசாதாரண ஆப்பிள் ஜாம் தயார். இதை பிரிட்ஜில் வைத்து 3-6 மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.

Nutrition

Serving: 300g | Calories: 104kcal | Carbohydrates: 7.6g | Protein: 5g | Fat: 3g | Sodium: 12mg | Potassium: 196mg | Fiber: 4.8g | Sugar: 11g | Vitamin A: 2IU | Vitamin C: 4.6mg | Calcium: 11mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ஆப்பிள் கேசரி இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து பாருங்க!