தித்திக்கும் சுவையில் ஆப்பிள் கேசரி இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து பாருங்க!

- Advertisement -

பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. அதே போல் இந்த இனிப்பை கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான இனிப்புப் பலகாரத்தை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆப்பிள் கேசரி பொதுவாக பண்டிகைகளின் போது தயாரிக்கப்படுகிறது. அல்லது இனிப்பு சாப்பிடும் போது கூட செய்யலாம். ஏலக்காயின் நறுமணத்தையும், ஆப்பிளின் இனிப்புச் சுவையையும் வெளிப்படுத்துவதால், இந்த கேசரி உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு குடும்பத்திற்கும் மிகவும் பிடிக்கும். ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பொதுவாக குழந்தைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் ரவையையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது. அதற்கு தான் இந்த இனிப்பான, ஆரோக்கியமான ஆப்பிள் கேசரி. இதனை எப்படி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ஆப்பிள் கேசரி | Apple Kesari Recipe In Tamil

பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. அதே போல் இந்த இனிப்பை கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக குழந்தைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் ரவையையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Apple Kesari
Yield: 4 People
Calories: 104kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை
  • 2 ஆப்பிள்
  • 1 1/2 கப் சர்க்கரை
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப் முந்திரி, திராட்சை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சிகப்பு புட் கலர்

செய்முறை

  • முதலில் ஆப்பிளை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்தது வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் ரவை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி துருவி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் ரவையை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
  • ரவை நன்கு வெந்ததும் சக்கரை மற்றும் புட் கலர் சேர்த்து கொஞ்சம் நெய் ஊற்றி நன்கு கிளறவும்.
  • கேசரி சட்டியில் ஒட்டாமல் வந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் அருமையான ஆப்பிள் கேசரி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 104kcal | Carbohydrates: 7.6g | Protein: 5.5g | Fat: 1.3g | Sodium: 2mg | Potassium: 195mg | Fiber: 4.8g | Sugar: 4g | Vitamin C: 4.6mg | Calcium: 6mg | Iron: 3.12mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!