Home காலை உணவு எப்பொழுதும் போல் ஸ்வீட்ஸ் கடையில் வாங்குவதற்கு வீட்டிலே சுவையான ஆப்பிள் பான் கேக் இப்படி செய்து...

எப்பொழுதும் போல் ஸ்வீட்ஸ் கடையில் வாங்குவதற்கு வீட்டிலே சுவையான ஆப்பிள் பான் கேக் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!!

கேக் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்புகளில் ஒன்று அதுவும் சுவையான கேட்கின்றால் யாருக்கு தான் பிடிக்காது என்பார்கள். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது ஆப்பிள் பான்‌ கேக். அமெரிக்காவின் பாரம்பர்ய உணவான பான் கேக் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத் தோன்றிய உணவு என்று கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் பழைமையான காலை உணவாக பான் கேக் உள்ளது. அதன் பாரம்பர்யத்தை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 26-ம் தேதி பான் கேக் தினமாக கொண்டாடப்படுகிறது.

-விளம்பரம்-

பான்கேக்குகள் என்பவை தட்டையான வட்டவடிவ இனிப்பு ரொட்டி வகையாகும். இவற்றை செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் இருந்தாலும், பொதுவாக இவை மாவு, முட்டை மற்றும் பால் போன்ற அடிப்படை மூலப்பொருட்களாலேயே செய்யப்படுகின்றன. இந்த பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம். செய்முறை மற்றும் டாப்பிங் மாறுபட்டாலும், பான்கேக்குகள் உலகம் முழுவதுமே பிரபலமான, ருசியான ஒரு உணவுப்பண்டமாகும்.

பொதுவாகவே பேன் கேக் என்றால் அனைவரம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாகவும் இருகின்றது எனலாம். மாலை நேரத்திலும் குழந்தைகளுக்கு ஸ்நாக் வைப்பதற்கும் இதை செய்யலாம். இந்த பேன் கேக்குடன் சிறிது பழங்கள், தேன் சேர்த்து உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். கிறிஸ்துமஸ்கு சுவையான பேன் கேக்கை சில நிமிடங்களில் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

Print
1 from 1 vote

ஆப்பிள் பான் கேக் | Apple Pancake Recipe In Tamil‌

அமெரிக்காவின் பாரம்பர்ய உணவான பான் கேக் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத் தோன்றிய உணவு என்று கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் பழைமையான காலை உணவாக பான் கேக் உள்ளது. அதன் பாரம்பர்யத்தை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 26-ம் தேதி பான் கேக் தினமாக கொண்டாடப்படுகிறது. பான்கேக்குகள் என்பவை தட்டையான வட்டவடிவ இனிப்பு ரொட்டி வகையாகும். இவற்றை செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் இருந்தாலும், பொதுவாக இவை மாவு, முட்டை மற்றும் பால் போன்ற அடிப்படை மூலப்பொருட்களாலேயே செய்யப்படுகின்றன. இந்த பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: American
Keyword: Apple Pan cake
Yield: 4 People
Calories: 104kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தவா

தேவையான பொருட்கள்

  • 2 ஆப்பிள்
  • 2 கப் மைதா
  • 1/2 கப் பொடித்த சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 கப் பால்
  • 4 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை

  • முதலில் ஒரு பவுலில் வெண்ணை, பொடித்த சக்கரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஆப்பிளை தோல் சீவி, சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து‌ தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • வெண்ணை சக்கரையுடன் இந்த ஆப்பிள் விழுதை சேர்த்து அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர், பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணை விட்டு நன்கு துடைத்து அப்புறம் கேக் மாவை ஊற்றவும்.
  • அடுப்பை குறைந்த தீயில் வைத்து கேக் நன்றாக உப்பி வந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து விடவும்.
  • அவ்வளவுதான் அருமையான ஆப்பிள் பான் கேக் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 104kcal | Carbohydrates: 2.6g | Protein: 4.5g | Fat: 1.3g | Potassium: 195mg | Fiber: 4.8g | Sugar: 2g | Vitamin A: 4.6IU | Vitamin C: 8mg | Calcium: 6mg | Iron: 2.5mg

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!