பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பரோட்டாவிற்கு என ஒரு தனி உணவுப் பிரியர்கள் கூட்டமே உண்டு. உணவு பிரியர்களையும் பரோட்டாவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. பிரியாணிக்கு அடுத்தப்படியாக உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி, தேடி தேடி உண்ணும் உணவாக உள்ளது பரோட்டா.
இதனையும் படியுங்கள் : பஞ்சு போன்ற சிலோன் பரோட்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பரோட்டாவிலும் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. பன் பரோட்டா, சில்லி பரோட்டா, வாழை இலை பரோட்டா, கிழி பரோட்டா, கொத்து பரோட்டா, கறி பரோட்டா, கொஸ்து பரோட்டா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பரோட்டா பிரியர்கள் அதிகம் விரும்பி உண்பது கொத்து பரோட்டா. ரோட்டுக்கடை கொத்து பரோட்டா என்றால் இன்னும் ஸ்பெஷல். நாம் இன்று ஆப்பிள் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். கூடவே இதனுடன் சால்னா கொஞ்சம் ஊற்றி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
ஆப்பிள் பராத்தா | Apple Paratha Recipe in Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 தோசை கல்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை
- 1 ஆப்பிள்
- 50 கிராம் பாசிப்பருப்பு
- 1 நறுக்கிய
- 1/2 டீஸ்பூன் எலுமிச்சை
- 1 சிட்டிகை உப்பு
- 1/2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
- 1/2 டீஸ்பூன் மிளகாயத்தூள்
- 1/4 டீஸ்பூன் பட்டை தூள்
- 5 பிஸ்தா
- 2 டீஸ்பூன் நெய்
செய்முறை
- ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்.
- அடுத்தது குக்கரில் பாசிப்பயறை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1 விசில் வைத்து எடுக்கவும். அதில் தண்ணீர் இருந்தால் வடித்துக் கொள்ளவும்.
- அடுத்தது ஆப்பிள் பொடியாக நறுக்கி இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைக்கவும்.
- அடுத்தது கடாயில் நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு ஆப்பிளை சேர்த்து வதக்கவும்.
- ஆப்பிள் பாதி வதங்கியதும் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இதில் உப்பு, மிளகுத்தூள், பட்டைத்தூள் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு போட்டு கலக்கவும்.
- அடுத்து சப்பாத்தி மாவு சிறிதளவு எடுத்து தேய்க்கவும். நடுவில் ஆப்பிள் கலவையை வைத்து, மூடி மறுபடியும் தேய்க்கவும்.
- தவாவை சூடு செய்து, செய்த பராத்தா'வை போட்டு நெய் ஊற்றி சுடவும்.
- சுவையான ஆப்பிள் பராத்தா ரெடி. இதுகூட கார சட்னி, சால்னா இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.