கமகமனு ருசியான பேபிகான் தோசை தோசை ஒரு முறை இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! ஒரு தோசை சாப்பிட்டாலே வயிறு புல் ஆகிரும்!

- Advertisement -

தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை, டபுள்டக்கர் தோசை, காளான் தோசை , பன்னீர் தோசை இப்படி பல வெரைட்டிகளில் தோசை கிடைக்கிறது. அருமையான பேபிகான் செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த பேபிகான் தோசை.

-விளம்பரம்-

இந்த பேபிகான் தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த பேபிகான் தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பேபிகான் தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த பேபிகான் தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி பேபிகான் தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா பேபிகான் தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.

- Advertisement -

நம்ம சைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி சைவத்தில் ஏதாவது வித்தியாசமா செய்து கொடுக்கும்போது தான் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த தோசைக்கு எந்த ஒரு சட்னியோ சாம்பாரோ தேவையே கிடையாது. இந்த தோசையில் இருக்கிற மசாலாவ அப்படியே நம்ம சாப்பிட்டுக்கலாம். ரொம்பவே சுவையா இருக்கும் இந்த பேபிகான் தோசை. சரி வாங்க இந்த பேபிகான் தோசை எப்படி சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

பேபிகான் தோசை | Babycorn dosai recipe in tamil

இந்த பேபிகான் தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த பேபிகான் தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பேபிகான் தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த பேபிகான் தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி பேபிகான் தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா பேபிகான் தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.
Prep Time15 minutes
Active Time1 hour 10 minutes
Total Time25 minutes
Course: Breakfast
Cuisine: tamilnadu
Keyword: adai dosai, Azhagar Kovil Dosai, Baby Corn Veg Noodles, Baby Potato Fry, Babycorn Groundnut Gravy, Bahubali dosai, Barnyard Millet Dosa
Yield: 6 people
Calories: 152kcal
Cost: 100

Equipment

  • 1 கடாய்
  • 1 தோசை கல்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பேபிகான்
  • 1 கப் இட்லி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கைப்பிடி புதினா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • முதலில் பேபிகானை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பிறகு பொரித்து எடுத்து வைத்துள்ள பேபிகான் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு சிறுது நேரம் கலந்து விட்டு லேசாக தண்ணீர் தெளித்துமசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பிறகு பேபிகானில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக மூடி போட்டு பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும்.
  • பேபிகான் மசாலா நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்துஅதன். மீது தோசை மாவை தோசையாக ஊற்றி அதன் மேல் பேபிகான் மசாலாவை தடவி ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போடாமல் தோசைய மடித்து எடுக்க வேண்டும்.
  • தோசை வெந்து பிறகு எடுத்து இந்த தோசையை சூடாக பரிமாறினால் சுவையான பேபிகான் தோசை தயார்.

Nutrition

Calories: 152kcal | Carbohydrates: 15g | Protein: 10g | Fat: 9g