தித்திக்கும் சுவையில் பாதாம் அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

- Advertisement -

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பாதாம் பயன்படுத்தி பாதாம் பால், பாதாம் பர்பி, பாதாம் அல்வா அன்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். இன்று நாம் பாதாம் ஹல்வா செய்வது எப்படி என்று காண உள்ளோம். இது செய்வது மிகவும் சுலபம் 25 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். இந்தியாவில் பல விதமான அல்வா செய்யப்படுகிறது. பாதாம் அல்வா, முந்திரி அல்வா, கேரட் அல்வா, வட இந்தியாவில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் அனைவரும் அறிந்தது திருநெல்வேலி அல்வா. இதுதவிர பாதாம் அல்வா திருமணம் போன்ற விசேஷங்களில் செய்யப்படும். பாதம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

-விளம்பரம்-

இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து அல்லது இது போன்ற அல்வா செய்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறப்படுகிறது. பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தரும் என கூறப்படுகிறது. பாதாம் அல்வா என்றவுடன் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட் ஆகும். இது இந்தியாவின் அனைத்து இடங்களிலும் அனைத்து சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களிலும் செய்து மகிழ்வார்கள். அவ்வளவு சுவை மிக்க பாதாம் அல்வா எவ்வாறு செய்வது என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
5 from 1 vote

பாதாம் அல்வா | Badam Halwa Recipe In Tamil

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பாதாம் பயன்படுத்தி பாதாம் பால், பாதாம் பர்பி, பாதாம் அல்வா அன்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். இன்று நாம் பாதாம் ஹல்வா செய்வது எப்படி என்று காண உள்ளோம். இது செய்வது மிகவும் சுலபம் 25 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். இந்தியாவில் பல விதமான அல்வா செய்யப்படுகிறது. பாதாம் அல்வா, முந்திரி அல்வா, கேரட் அல்வா, வட இந்தியாவில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் அனைவரும் அறிந்தது திருநெல்வேலி அல்வா. இதுதவிர பாதாம் அல்வா திருமணம் போன்ற விசேஷங்களில் செய்யப்படும். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து அல்லது இது போன்ற அல்வா செய்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறப்படுகிறது.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Badam Halwa
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 1/2 கப் பாதாம்
  • 1 1/2 கப் சர்க்கரை
  • 3/4 கப் பால்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 200 மிலி நெய்
  • 1 டீஸ்பூன் குங்குமப் பூ

செய்முறை

  • முதலில் பாதாம் பருப்பை அரை மணி நேரம் சூடான தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் பாதாமை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொஞ்சம் உதிரி உதிரியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி அரைத்த பாதாம் விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் தொடர்ந்து கலந்து விடவும்.
  • பின் குங்குமப் பூ மற்றும் நெய் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
  • அதன்பிறகு சர்க்கரை, சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து 15 நிமிடங்கள் வரை கிளறி வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் சிறிதளவு பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி அல்வா மீது தூவி பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான பாதாம் அல்வா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 164kcal | Carbohydrates: 6.1g | Protein: 6g | Fat: 4.2g | Sodium: 4mg | Potassium: 733mg | Fiber: 3.5g | Calcium: 269mg | Iron: 3.71mg

இதனையும் படியுங்கள் : சுவையான கேரட் பாதாம் போளி வீட்டிலயே சுலபமாக செய்து எப்படி தெரியனுமா? தெரியாதவுங்க தெரிஞ்சிகொங்க!