சுவையான பாதாம் கீர் ஒரு தரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

- Advertisement -

ஒரு சில உணவுகளை மட்டுமே நாம் சூடாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குளிர்ச்சியாக வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பாதாம் கீர் சூடாக குடித்தாலும் சுவை ருசியாக இருக்கும். குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தாலும் சுவை இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக இந்த பாதாமில் ஏராளமான நன்மைகள் உள்ளது.  குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இந்த பாதாமை சாப்பிட்டால் அவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

-விளம்பரம்-

எப்பொழுதும் டீ காபி பால் கூல் ட்ரிங்ஸ் ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த பாதாம் கீர் ஐ நாம் செய்து குடிக்கலாம். நாம் அனைவரும் நினைத்திருப்போம் இது மாதிரியான பாதாம் கீர் கடைகளில் வாங்கி குடித்தால் மட்டுமே சுவையாக இருக்கும் என்று, ஆனால் வீட்டில் கூட நம்மால் ஆரோக்கியமான முறையில் மிகவும் சுத்தமாக ஒரு அருமையான பாதாம் கீர் செய்ய முடியும்.

- Advertisement -

இந்த பாதாமில் வைட்டமின் ஈ, வைட்டமின் டி போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உண்டு எனவே நாம் அனைவரும் இதை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும். முகம் பளபளப்பாக இருக்க உடல் எடையை குறைக்க கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க என பல விதமான நன்மைகள் உண்டு. இந்த சுவையான பாதாம் கீர் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இப்பொழுது இந்த பாதாம் கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பாதாம் கீர் | Badham Kheer Recipe In Tamil

ஒரு சில உணவுகளை மட்டுமே நாம் சூடாக சாப்பிட்டாலும்சுவையாக இருக்கும். குளிர்ச்சியாக வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில்பாதாம் கீர் சூடாக குடித்தாலும் சுவை ருசியாக இருக்கும். குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜில்வைத்து குடித்தாலும் சுவை இன்னும் அருமையாக இருக்கும். முகம் பளபளப்பாக இருக்க உடல் எடையை குறைக்க கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாகஇருக்க என பல விதமான நன்மைகள் உண்டு. இந்த சுவையான பாதாம் கீர் உங்கள் வீட்டில் உள்ளஅனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இப்பொழுது இந்த பாதாம் கீர் எப்படி செய்வது என்றுபார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Badham Kheer
Yield: 4
Calories: 194kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாதாம் பருப்பு
  • 1 கப் பிஸ்தா பருப்பு
  • 4 கப் பால்
  • 3/4 கப் சர்க்கரை
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 3 ஏலக்காய்

செய்முறை

  • முதலில் பாதாம் பருப்புகளை சுடு தண்ணீரில் ஒரு மணி நேரத்துக்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம்களின் தோலை உரித்து போட்டு சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும் ஏலக்காய்களை பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிஸ்தா பருப்புகளையும் பொடிப்பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு காய்ச்சிய பிறகு அரைத்து வைத்துள்ள பாதாம் கலவையை சேர்க்க வேண்டும்.
  • அதனுடன் சர்க்கரை குங்குமப்பூ பொடியாக்கி வைத்துள்ள பிஸ்தா பருப்புகள் அனைத்தையும் போட்டு நன்றாக கிளறவேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதித்த பிறகு வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் பிஸ்தா பருப்புகளை சேர்த்துக்கொள்ளலாம்.
  • சூடான பாதாம் கீர் குடிப்பதற்கு தயாராக உள்ளது. இதனை அப்படியே சூடாக குடித்தாலும் சுவையாக இருக்கும்.குளிர்ச்சி சேராதவர்கள் இதனை இப்படியே குடிக்கலாம்.
  • குளிர்ச்சியாக குடிக்க பிடிக்கும் என்பவர்கள் இதனை பாட்டில்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு ஒரு மணி நேரம் எடுத்து குடிக்கலாம் சுவை அருமையாக இருக்கும்
  • இந்த பாதாம் பருப்புகளை அப்படியே சாப்பிடுவதற்கு பிடிக்காதவர்களுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால்விரும்பி குடிப்பார்கள்

Nutrition

Serving: 100ml | Calories: 194kcal | Carbohydrates: 21g | Protein: 6g | Sodium: 132mg | Potassium: 298mg | Calcium: 23.1mg