இந்த நவீன காலத்தில் தங்கள் முகங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக மார்க்கெட்டில் பல ரசாயனம் கலந்த கிரீம்கள் விளம்பரம் படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். நாமும் விளம்பரங்களை பார்த்துவிட்டு அந்த ரசாயனங்கள் அதிகம் உள்ள பீயூட்டி கிரீம்களை நம் உடல் முழுவதும் பூசிக்கொண்டு நம் உடலில் நஞ்சை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என தெரிந்தே சேர்த்து கொண்டு இருக்கிறோம். இயற்கையான முறைகள் பல உண்டு நம் சருமங்களை பாதுகாப்பதற்காக. ஆனால் நாம் அந்த வழிகளை கடைபிடிப்பது இல்லை, ஆனால் சொல்லுவது என் கடமை இன்று வாழைப்பழத்தில் ஃபேஸ் பேக் செய்து முகத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது, எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை, அப்ளை செய்யும் விதம் என அனைத்தையும் இந்த அழகு குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :-
1 – வாழைப்பழம்
1 டீஸ்பூன் – எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் – தேன்
1 டீஸ்பூன் – பால் பவுடர்
1 டீஸ்பூன் – தயிர்
செய்முறை 1 :-
முதலில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள் வாழைப்பழத்தின் தோலை உரித்து விட்டு உள்ளிருக்கும் பலத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
இந்த வாழைப்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மையாக அரைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்பு இப்படி அரைத்து வைத்துள்ள வாழைப்பழ பேஸ்ட்டை ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.
செய்முறை 3 :-
பின்பு அதனுடன் தயிர், பால் பவுடர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இப்பொழுது நமது வாழைப்பழ ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.
அப்பளை செய்யும்முறை :-
செய்முறை 1 :-
ஃபேஸ் பேக்கை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள் அதன் பின்பு. இந்த வாழைப்பழ ஃபேஸ் பேக் முகத்தில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
பின்பு கழுத்திலும் அடிகழுத்திலும் அப்ளை செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் முகத்தில் மட்டும் நீங்கள் ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து கொண்டு வந்தீர்கள் என்றால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து ஒரு நிறமாகவும் தெரியும்.
செய்முறை 3 :-
பின்பு ஃபேஸ் பேக்கை அப்ளை செய்துவிட்டு 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை ஃபேஸ் பேக் உலறும் வரை காத்திருங்கள். பிறகு ஃபேஸ் பேக் காய்ந்தவுடன் ஐஸ் தண்ணீரை கொணடு முகத்தை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 4 :-
பின்பு துண்டு எடுத்து முகத்தை தேய்த்து துடைக்காமல் முகத்தில் இருக்கும் தண்ணீரை ஒத்தி எடுத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செயல்கள் அனைத்தையும் நீக்கி உங்கள் முகத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாறிவிடும்.