கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் எந்தவிதத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி சுவையான உணவு வகைகளின் சொர்க்கமாகவும் உள்ளது. கேரளாவில் கிடைக்கும் இனிப்புகள் அவற்றின் தனித்துவத்திற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் பாரம்பரிய இனிப்புகள் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வகையில் இருக்கும். கேரளாவிற்கு நீங்கள் சென்றால் தவறாமல் இந்த வாழைப்பழ அல்வாவை ருசியுங்கள். பழுத்த வாழைப்பழங்கள் மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி வாழைப்பழ அல்வா தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் எப்படி திருநெல்வேலி அல்வா பிரபலமோ அது போல கேரளாவில் வாழைப்பழ அல்வா மிகப் பிரபலம். இந்த அல்வா பஞ்சுபோல இருக்கும். மற்ற தென்னிந்திய இனிப்புகளிலிருந்து இந்த வாழைப்பழ அல்வா முற்றிலும் வேறுபடுகிறது. பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் செவ்வாழை, ரஸ்தாலி, நாட்டு வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மலைவாழை என பல வகைகள் உண்டு. இதில் பொட்டாசியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. இதுதவிர வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த வாழைப்பழம் எளிதில் கிடைக்கக் கூடிய பழம். அதனால் இந்த வாழைப்பழ அல்வாவை நொடியில் சமைத்து விடலாம். விருந்தினர்கள் வந்தாலும் நொடியில் செய்து அசத்தலாம். பொதுவா நம்ம வீட்டில் அதிகமாக வாழைப்பழம் இருந்தால் அதை வீணாக்கிவிடுவோம், இனி அவ்வாறு வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது, நம்ம வீட்டில் வாழைப்பழம் அதிகமாக இருந்தால் அதை வீணாக்காமல் நாவில் கரையக்கூடிய சுவையான வாழைப்பழம் அல்வா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரளா நேந்திர வாழைப்பழ அல்வா | Banana Halwa Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 நேந்திரம் வாழைப்பழம்
- 1/2 கப் நாட்டு சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர்
- 1 கப் நெய்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/4 கப் பாதாம், முந்திரி
செய்முறை
- முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின் அதே நெய்யில் அரைத்து வைத்துள்ள வாழை பழத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- நெய்யும் வாழைப்பழமும் ஒன்று சேரும் வரை கை விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு கார்ன் பிளவர் மாவை நன்கு தண்ணீரில் கரைத்து வாழைப்பழ அல்வாவில் சேர்த்து கிளறி விடவும்.
- அல்வா நிறம் மாறி வரும் போது சிறிது நெய் சேர்த்து கிளறி விடவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்பெஷல் நேந்திர வாழைப்பழ அல்வா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாழைப்பழம் இருந்தால் போதும் நீங்களும் இப்படி மிருதுவான கேக் செய்யலாம்! அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!