கோடைகாலம் துவங்கி விட்டாலே முதலில் நம் நினைவிற்கு வருவது மாங்காய் தான். கோடை காலத்தில் குழந்தை, பெரியவர் அல்லது வயது வித்தியாசம் இல்லாமல் யாரும் பார்க்கத் தயங்காத இடமாக கடற்கரை உள்ளது. பீச்சுக்கு போனாலே முதலில் கண்ணில் படுவது மாங்காய் மசாலா தான். அருமையாக நீள நீளமாக வெட்டி அதில் மாங்காய்க்கு தேவையான மசாலாவை தூவி பேப்பரில் மடித்து கொடுப்பார்கள்.
இதனையும் படியுங்கள் :ருசியான செட்டிநாடு மாங்காய் பச்சடி இது போன்று செய்து பாருங்க! சுவைக்க பஞ்சமிருக்காது!
நம்மில் பலரும் கடற்கரைக்குச் சென்றால் அங்கு கடலின் அழகினை ரசிக்கிரோமோ இல்லையோ அங்கு உள்ள அனைத்து உணவுகளையும் சுவைக்க மறப்பதில்லை. அதிலும் குறிப்பாக மாங்காய் கடற்கரையில் விற்கும் மாங்காயிணை நாம் வாங்கி சாப்பிடாமல் ஒருபோதும் வீடு திரும்புவதில்லை. அதன் சுவையே தனித்துவமானது. அப்படியே அனைவரையும் கவர்ந்த பீச் ஸ்டைல் மாங்காய் எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் காணலாம்.
பீச் ஸ்டைல் மாங்காய் | Beach Style Mangai Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 மாங்காய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
- கல் உப்பு சிறிதளவு
- 1 டீஸ்பூன் வெல்லம்
- எண்ணெய் சிறிதளவு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும் கடாய் சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்ததும் மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும்.
- பின் இந்த கலவை ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும். அத்துடன் நாம் எடுத்து வைத்திருக்கும் வெள்ளம் சிறிதளவு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- அவ்வளவுதான் மாங்காவிற்கு தேவையான மசாலா தயார்.
- பின் மாங்காவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதன் மேல் நாம் தயாரித்து வைத்திருக்கும் இந்த பொடியை தூவினால் போதும் பீச் ஸ்டைல் மாங்காய் ரெடி.