மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான பீட்ரூட் கட்லெட் இப்படி செய்து சுட சுட சாப்பிட கொடுத்து பாருங்க!

- Advertisement -

உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால் அவற்றைக் கொண்டு சுவையான கட்லெட் செய்து கொடுங்கள். சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் என பல வகை உள்ளது. தற்போது ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம். குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

-விளம்பரம்-

இனிப்பு சுவையோடு பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலோட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆரோக்கியமான ரெசிபியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கட்லெட் ரெசிபியை டிரை பண்ணிப்பாருங்கள். பீட்ரூட் கட்லெட்டை நாம் பீட்ரூட், பச்சை பட்டாணி, மற்றும் முந்திரியை சேர்த்து செய்வதால் இவை உடம்பிற்கு சத்தானதும் கூட. பீட்ரூட் கட்லெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் பீட்ரூட்டை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை இவ்வாறு அசத்தலான கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

- Advertisement -
Print
3 from 1 vote

பீட்ரூட் கட்லெட் | Beetroot Cutlet Recipe In Tamil

உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால் அவற்றைக் கொண்டு சுவையான கட்லெட் செய்து கொடுங்கள். சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் என பல வகை உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. தற்போது ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Beetroot Cutlet
Yield: 4 People
Calories: 58kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1/2 கப் பிரெட் கிராம்ஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ துருவிய பீட்ரூட், பச்சை பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் கலந்து வைத்திருக்கும் கலவையுடன் உருளைக்கிழங்கு மற்றும் அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி, பிரெட் கிராம்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் இந்த கலவையை சிறிது எடுத்து வடை போல உருண்டையாக உருட்டி தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட்லெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 4.2g | Fat: 1.2g | Sodium: 106mg | Potassium: 442mg | Fiber: 3.8g | Vitamin A: 128IU | Vitamin C: 4.9mg | Calcium: 22mg | Iron: 3.09mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான பீட்ரூட் இனிப்பு அடை இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க நிறையவே பீட்ரூட் சாப்பிடுவாங்க!