சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பீட்ரூட் மோர் குழம்பு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

- Advertisement -

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த ‌மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள்.

-விளம்பரம்-

இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் பீட்ரூட் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு. சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள பீட்ரூட் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

பீட்ரூட் மோர் குழம்பு | Beetroot Mor Kuzhambhu Recipe In Tamil‌

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த ‌மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. அந்த மோர்க் குழம்பில் பீட்ரூட் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Beetroot Mor Kuzhambhu
Yield: 4 People
Calories: 58kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பீட்ரூட்
  • 1 கப் புளித்த தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் பச்சரிசி
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் துவரம் பருப்பு மற்றும் பச்சரிசியை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் துவரம் பருப்பு, பச்சரிசி, தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு புளித்த தயிரை நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பின் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
  • பீட்ரூட் நன்கு வெந்ததும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்த சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • இந்த கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து விட்டு. சிறிது நேரம் கழித்து தயிர் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் வித்தியாசமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் மோர்குழம்பு தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 4.3g | Fat: 0.2g | Sodium: 22mg | Potassium: 442mg | Fiber: 3.8g | Vitamin A: 2IU | Vitamin C: 4.9mg | Calcium: 16mg | Iron: 0.8mg

இதனையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்திக்கு பூரிக்கு அருமையான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!