2 பாக்கெட் மேரி பிஸ்கட் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் குலாப் ஜாமூன் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

குலாப் ஜாமூன் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இந்த ஸ்வீட் அப்படிங்கறது எல்லாம் குலாப் ஜாமூன் அப்படிங்கறதுக்கு மிகப்பெரிய இடம் இருக்கு. குலாப் ஜாமூன், ரசகுல்லா இது எல்லாம் ஒரே கேட்டகிரில வரக்கூடிய இனிப்பு வகைகள். அந்த வகையில குலாப் ஜாமூன் அப்படின்னு சொன்னோனா போதும் எல்லார் நாக்குலையும் அப்படியே அது டேஸ்ட் வந்து எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த குலாப் ஜாமூன்.

-விளம்பரம்-

இந்த குலாப் ஜாமூன் தனியா மிக்ஸ் பவுடர் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி தான் நம்ம எப்பவுமே செஞ்சிட்டு இருக்கோம். இதுபோக நீங்க பார்த்தீங்கன்னா நிறைய பேரவா இதை கோதுமை மாவுல, மில்க் பவுடர், ரவா இப்படி வித்தியாசம் வித்தியாசமான மாவுகளில் குலாப் ஜாமூன் செய்துகொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில இன்னைக்கு நம்ம பண்ண போறது பிஸ்கட் குலாப் ஜாமூன் அது என்னடா பிஸ்கட் குலாப் ஜாமூன் அப்படிங்கறிங்களா ஒன்னும் இல்லங்க பிஸ்கட்ல குலாப் ஜாமூன் பண்ண போறோம்.

- Advertisement -

வேற வேற மாவுகளை குலாப் ஜாமூன் ட்ரை பண்ணி ட்ரை பண்ணி போர் அடிச்சுச்சு அதனால பிஸ்கட்ட பவுடர் பண்ணி அதில் குலோப்ஜாமூன் பண்ணி சாப்பிட போறோம். இது உண்மையிலேயே ரொம்பவே நல்லாத்தான் இருக்கு. என்னடா பிஸ்கட்ல குலோப்ஜாமூன் பண்றோம் டேஸ்ட் நல்லா இருக்காதோ அப்படினு யோசிக்காதீங்க. நம்ம பத்து ரூபாய் மேரி பிஸ்கட் வாங்கி அதுல தான் இந்த குலாப் ஜாமூன் பண்ண போறோம். அப்படியே ஜீராவுல போட்டு எடுத்து சாப்பிடும்போது அதோட டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். எல்லாருக்கும் இந்த குலோப் ஜாமூன் ரொம்பவே பிடிக்கும். இன்னும் வேணும்னு சொல்லி வாங்கி சாப்பிட்டு இருப்பாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பிஸ்கட் குலாப் ஜாமூன் சரி வாங்க இந்த பிஸ்கட் குலாப் ஜாமூன் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
4.25 from 4 votes

பிஸ்கட் குலாப் ஜாமூன் | Biscuit gulab jamun recipe in tamil

குலாப் ஜாமூன் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இந்த ஸ்வீட் அப்படிங்கறது எல்லாம் குலாப் ஜாமூன் அப்படிங்கறதுக்கு மிகப்பெரிய இடம் இருக்கு. குலாப் ஜாமூன், ரசகுல்லா இது எல்லாம் ஒரே கேட்டகிரில வரக்கூடிய இனிப்பு வகைகள். அந்த வகையில குலாப் ஜாமூன் அப்படின்னு சொன்னோனா போதும் எல்லார் நாக்குலையும் அப்படியே அது டேஸ்ட் வந்து எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த குலாப் ஜாமூன்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: tamilnadu
Keyword: Gulab Jamun
Yield: 10 People
Calories: 169kcal
Cost: 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2 பாக்கெட் மேரி பிஸ்கட்
  • 1 கப் சர்க்கரை
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • 1/2 கப் பால்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மேரி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு முடித்து வைத்துள்ள பிஸ்கட் பவுடரில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து குலாப் ஜாமுன் உருண்டைகள் உருட்டும் பதத்திற்கு மாவை பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப்பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பாகை உறிந்த பின் சாப்பிட்டால் சுவையான பிஸ்கட் குலாப் ஜாமூன் தயார்.

Nutrition

Calories: 169kcal | Carbohydrates: 10g | Protein: 6g | Fat: 15g