கேரளா பாகற்காய் உருளைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

பாகற்காய் பலரால் வெறுக்கப்படும் காய்கறிகளில் ஒன்றாகும், ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள்: ருசியான கேரளா பருப்பு  குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட அசத்தலாக இருக்கும்!

- Advertisement -

நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் புதிய பாகற்காய் சாறு குடித்து வந்தால், உங்கள் நீரிழிவு நோயாளிகள் மிகவும் குறையும் என்று நான் நம்புகிறேன். அதற்கு இது ஒரு அதிசய மருந்து.புதிய பாகற்காய் கசப்பு தாங்க முடியாதவர்கள், அதை சமைத்து சாப்பிடுங்கள்.இந்த பதிவில் சுவையான கேரளா பாகற்காய் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Print
5 from 1 vote

பாகற்காய் உருளைக்கிழங்கு மசாலா | Pakarkai Potato Masala Recipe in Tamil

பாகற்காய் பலரால் வெறுக்கப்படும் காய்கறிகளில் ஒன்றாகும், ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் புதிய பாகற்காய் சாறு குடித்து வந்தால், உங்கள் நீரிழிவு நோயாளிகள் மிகவும் குறையும் என்று நான் நம்புகிறேன். அதற்கு இது ஒரு அதிசய மருந்து.புதிய பாகற்காய் கசப்பு தாங்க முடியாதவர்கள், அதை சமைத்து சாப்பிடுங்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, Kerala
Keyword: pakarkai kulambu
Yield: 4 People
Calories: 17kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் பாகற்காய்
  • 1 வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியாத் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள்
  • 1 சிட்டிகை உப்பு                             

தாளிக்க

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1/4 டேபிள் ஸ்பூன் உளுந்த பருப்பு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு

செய்முறை

  • பாகற்காயை நன்கு கழுவி, மெல்லிசாக, நீளவாக்கில் வெட்டி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து, பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும், மஞ்சள், உப்பில் ஊறவைத்துள்ள பாகற்காயை நன்கு பிழிந்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
  • பாகற்காயை மஞ்சள், உப்பில் ஊறவைத்து பின்னர் பிழிந்து சேர்ப்பதால் அதில் உள்ள கசப்பு சுவையானது குறைந்துவிடும்.
  • பின்னர் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கினை சேர்க்கவும்.
  • அதனுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி, ஒரு கலக்கு கலக்கி இறக்கினால் பாகற்காய், உருளைக் கிழங்கு வதக்கல் கலக்கலாக சுவைக்கலாம்.
  • இந்த வதக்கல் சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்துசாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 17kcal | Carbohydrates: 3.7g | Protein: 23g | Fiber: 2.8g | Vitamin A: 417IU | Vitamin C: 84mg | Iron: 0.4mg