தர்ப்பணத்திற்கு கருப்பு எள் பயன்படுத்துவதற்கு என்ன காரணம் ? தெரிந்தால் ஆச்சர்யபடூவீர்கள்!

- Advertisement -

தர்ப்பணம்

அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். ஆனி மாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கஷ்டம் பண சிக்கல்கள் போன்ற அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும். அதேபோல் வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். அதாவது முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவதற்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

தோஷங்களில் மிகவும் கொடுமையானது பித்ரு தோஷம். ஒருவருக்குத் திய மகாதசை புத்தி காலங்களில் பித்ரு தோஷம் மிகக் கடுமையாக பாதிக்கும். அன்னதானம், உடை தானம், பசு தானம் ஆகியவை மிகவும் போற்றப்படுகின்றன. இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள்.

- Advertisement -

கருப்பு எள்

திலா என்றால் கருப்பு நிற எள் என்று அர்த்தம். இது மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும் என்கிறது சாஸ்திரம். வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும். அதேபோல் கருப்பு நிற எள், பித்ருக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எனவே, தர்பணத்தில் கருப்பு எள் உபயோகிப்பது மிக மிக அவசியம்.

கருப்பு எள் ஏன் தர்ப்பணத்தில் பயன்படுகிறது?

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்வார்கள் என்றும், அதுவே தோஷமாக மாறும் என்றும் சொல்லப் படுகிறது. நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

எள்ளிற்கு அப்படி என்ன சிறப்பு ?

எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று. பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பன வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். வீட்டின் பானையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எள்ளானது பித்ரு வருவதைச் சொல்ல நிமிர்ந்து நிற்பதாக நம்பப்படுகிறது. நீரும் எள்ளும் ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

-விளம்பரம்-

தர்ப்பை புல்

உஷ்ணம் மிகுந்த தர்ப்பை அமாவாசையிலும் கிரகண காலத்திலும் அதிக வீர்யம் உடையதால் தர்ப்பணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தர்ப்பை புல் ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக் கூறுவர். தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்ப்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.

இதனையும் படியுங்கள் : இந்த வேரை மட்டும் ‌ பீரோ மற்றும் கல்லாப் பெட்டியில் வையுங்கள் பண மழை பொழிய தொடங்கி விடும்!